நம் நாட்டை பாருங்கள் என்ற சுற்றுலா திட்டத்தை தொடங்க போகிறோம்!





stephen colbert GIF by The Late Show With Stephen Colbert








மொழிபெயர்ப்பு நேர்காணல்

பிரகலாத் சிங் படேல், சுற்றுலாத்துறை அமைச்சர்

பெருந்தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை எப்படி மீட்கப்போகிறீர்கள்?

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆகியவற்றின் மூலமே அளவிடப்படுகிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதனை இழப்பிலிருந்து மீட்பதற்கான திட்டங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

பெருந்தொற்றுக்கு பிறகான திட்டங்கள் என்ன?

மத்திய அரசு இத்துறைக்கான நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்களின் கைகளில் பணம் கிடைக்கும்போது, இத்துறை நல்ல நிலைக்கு மீள வாய்ப்புள்ளது.

இப்போதைக்கு இந்தியாவிலுள்ள சுற்றுலா தளங்கள், தங்குமிடங்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றை பாதுகாப்பானதாக மாற்றவேண்டும். பிறகே, சுற்றுலா பயணிகள் எந்த கேள்வியுமின்றி இங்கு வருவார்கள். இனி இத்துறையினர் முன்பு போல அன்றி, பல்வேறு புதுமைத்திறன்களோடு இருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும். இதற்கு சரியான கல்வி மற்றும் விழிப்புணர்வை அளிக்க வேண்டியுள்ளது.

பொதுமுடக்கம் விலக்கப்பட்டபிறகும் கூட வெளிநாடுகளுக்கு செல்வதற்கான சுற்றுலா பயணங்கள் புத்துயிர்ப்பு பெறவில்லை. உள்நாட்டு சுற்றுலாவை அரசு ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதா?

வெளிநாடுகளில் சுற்றுலாதுறை தன் இயல்புநிலைக்கு மீள கூடுதல் காலம் தேவைப்படூம். நம் நாட்டை பாருங்கள் என்ற திட்டத்தை பெருந்தொற்றுக்கு முன்னமே தொடங்கிவிட்டோம். அதன்படி, உள்நாட்டு சுற்றுலா தளங்களை மக்களுக்கு விளம்பரம் செய்ய உள்ளோம். இதனால் மக்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களை எளிதாக சுற்றிப்பார்க்க முடியும். வெபினார் மூலம் மாணவர்கள், சுற்றுலாதுறையினர் ஆகியோரிடம் சுற்றுலா பிரசாரங்களை செய்யப்போகிறோம். இயற்கை வளம் நிறைந்த இடங்களிலும் நாங்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்றது போன்ற ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம்.

சுற்றுலா மூலம்தான் பொருளாதாரம் மீட்சி பெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். எப்படி?

சுற்றுலாவை ஊக்குவிக்க மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்கள் உள்ளடங்கிய குழுவினர் என் தலைமையில் உருவாக்கப்பட்ட்டுள்ளனர். விரைவில் நாங்கள் அதற்கான வேலைகளைத் தொடங்குவோம்.

சுற்றுலாத்துறைக்கென உலக நாடுகள் தனியாக நிதியுதவிகளை வழங்கியுள்ளனவே?

பிரதமர் அனைத்து துறைகளுக்குமான 20 லட்சம் கோடி ரூபாயை அறிவித்துள்ளார். சிறு குறு தொழிலகங்கள் இதன்மூலம் மீட்சி பெறும். இதோடு தற்சார்பு இந்தியாவிற்கான திட்டங்களையும் முன்மொழிந்துள்ளார்.

இந்தியாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஈர்க்கவேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். சாத்தியமா?

நாங்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகவே இருக்கிறோம். அவர்கள் வந்தால் கேள்விகளை எழுப்பாதபடி சுற்றுலா தலங்கள் பாதுகாப்பாக இருக்கும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

லிஸ் மேத்யூ


கருத்துகள்