தற்சார்புக்காக அதிக செலவுகளை செய்ய, சேமிப்புகளை கரைக்க தயாராக இருக்கிறீர்களா? - ரதின் ராய்






We have to treat the economy as if this is wartime, says Rathin ...
பிஸினஸ் ஸ்டாண்டர்டு





ரதின் ராய், பொது பொருளாதாரம் மற்றும் கொள்கை அமைப்பு தலைவர்


ரதின்ராய், மேற்சொன்ன அமைப்பின் தலைவராக இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் பதவியைவிட்டு விலகுகிறார். இவருடைய பதவிக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரவிருக்கிறார். பிரதமர் மோடிக்கு ஆலோசகராக இருந்த ரதின்ராயின் அடுத்த திட்டம், இந்தியா சீனாவை விட குறைந்த செலவில் பொருட்களை தயாரித்து தர முடியுமா, இந்தியாவின் முன்னுள்ள அடுத்த திட்டங்கள், வாய்ப்புகள் என்னவென்று அவரிடம் பேசினோம்.

நீங்கள் பதவி விலகுவதற்கும், உர்ஜித் படேல் பதவி ஏற்பதற்குமான நிகழ்ச்சிகளை தற்செயல் என்று கூறலாமா?

இந்த அமைப்பின் தலைவர் விஜய் கேல்கர். அவர் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதற்கும், உர்ஜித் படேல் அந்த பதவிக்கு அறிவிக்கப்பட்டதற்கும், நான் பதவியை ராஜினாமா செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உர்ஜித் படேலை விட இப்பதவிக்கு வேறு யாரும் பொறுத்தமாக இருக்க முடியாது. உலகளவில் அவர் பிரபலமான ஆளுமை, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகிய அம்சங்கள் நம் முன் உள்ளன. அவர் பதவியேற்றபிறகு நான் பதவி விலகினால் கூட நீங்கள் அதற்குப் பின்னால் ஏதாவது காரணங்கள் இருக்கிறது என்று கூறலாம். இந்த அமைப்பிற்கு நெருங்கிய தொடர்புகொண்டவர்தான் உர்ஜித் படேல்.

நீங்கள் பதவி விலகுவதற்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

நான் கொள்கை சார்ந்து பல்வேறு விஷயங்களை படிக்கவும், திட்டமிடவும் உள்ளேன். ஓர் அமைப்பில் வேலைசெய்து அதன் கொள்கைகளுக்கேற்ப உழைப்பது என்பதுவேறு. தனிப்பட்ட கருத்தியல்களுடன் செயல்படுவது வேறு. தேசிய பொருளாதார மற்றும் கொள்கை அமைப்பு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான வழிகாட்டல்களை உருவாக்கி கொடுத்து தன்னை தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

கொள்கைகளை உருவாக்கும் வட்டாரம் சார்ந்து நீங்கள் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாக கூறுபவர்தான். இதில் உங்களுக்கு ஏதேனும் கடினமான அனுபவங்கள் ஏற்பட்டதா?

இத்தகைய பொது நிதி நிர்வாக அமைப்புகளில் இருக்கும்போது உங்களுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. நீங்கள் எப்போது பிரச்னைகள் பற்றியும் அதன் தீர்வுகளைப் பற்றியும்தான் பேசவேண்டும். தனிப்பட்ட ஆளுமைகள் பற்றி பேசக்கூடாது. இன்று இந்தியா சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கான காரணம் இந்த அமைப்போ, அரசோ காரணம் கிடையாது என்று நான் நம்புகிறேன்.

பெருந்தொற்று காலத்தை சிலர் வளர்ச்சி வாய்ப்புக்கான காலம் என்று கூறுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த பெருந்தொற்று காலத்தை நான் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதவில்லை. இந்த சிக்கலான காலத்தை நாம் சமாளிக்க தயாராவது முக்கியம். இந்த நேரத்தில் சவாலை ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுக்கு முயலும்போது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்கலாம். தொண்ணூறுகளில் இந்திய அரசு கடன்தொகையை கட்டுவது சார்ந்த பிரச்னையை சந்தித்து தாராளமயத்தை நோக்கி நகர்ந்தது. இன்றைய பிரச்னையும் அன்று ஏற்பட்ட நிலையும் ஒன்று கிடையாது. ஆனால் நம்முன் ஏற்பட்டுள்ள சவால் என்பது உண்மையானதுதான்.

தற்சார்பு இந்தியா என்ற அறிவிப்பை இந்திய பிரதமர் அறிவித்தார். உடனே இந்தியாவெங்கும் சீனப்பொருட்களை புறக்கணிக்கவேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்.

நாம் சீன நாட்டை விரும்புவதால் அங்கு தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதில்லை. தையல் ஊசிகள் போன்ற சின்னச்சின்ன பொருட்களை அந்த நாட்டில்தான் தயாரிக்கிறார்கள். நாம் தயாரிப்பதில்லை. அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையென்றால் நீங்கள் வாங்கித்தானே ஆகவேண்டும்? தற்சார்பு இந்தியா பிரசாரத்திற்கு உண்மையாக இருக்கவேண்டுமெனில், மக்கள் அதிக விலை கொடுத்து இங்கேயே தயாரிக்கும் பொருட்களை வாங்கவேண்டும். தனிப்பட்ட அனைவரும் நிறைய செலவுகளை இழப்புகளை ஏற்கவேண்டும். அல்லது சீனாவை விட மிக குறைவான தொகையில், இந்தியாவில் தயாரிக்க முடியும் என்றால் தயாரிக்க வேண்டும்.

எதிர்காலத்திற்கான உங்களது திட்டங்கள் என்ன?

சில வாய்ப்புகள் எனக்கு வந்திருக்கின்றன. நான் தனியார் துறை சார்ந்தவர்களிடம் பேசிவருகிறேன். என் மனதிற்கு பிடித்திருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பேன்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

அருண்ராய் சௌத்ரி

கருத்துகள்