இடுகைகள்

நெட்பிளிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழகு மற்றும் ஆடைகளை விற்கும் மசாபா குப்தாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  மசாபா லவ் சைல்ட் லிப்ஸ்டிக் வடிவமைப்பாளர் மசாபா குப்தா மசாபா குப்தா நிறுவனர் ஹவுஸ் ஆஃப் மசாபா   ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் மசாபா குப்தா. அவரின் நிறுவனம்தான் ஹவுஸ் ஆஃப் மசாபா. இந்த நிறுவனம், லவ் சைல்ட் என்ற பெயரில் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்கிறது. இந்த பொருட்கள் சல்பேட், பாரபீன் போன்ற வேதிப்பொருட்கள் கலப்பில்லாதவை. வீகன் முறையில் தயாரிக்கப்படுபவை. 75 நாடுகளுக்கு மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஹவுஸ் ஆஃப் மசாபா கடைகளில், லவ் சைல்ட் அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கடைகளில் வாங்க முடியாதவர்கள் இணையத்தில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். லவ் சைல்ட் பிராண்டில் அடுத்ததாக நிறைய பொருட்கள் வெளியாக உள்ளன. மும்பையில் தனது கடையைத் தொடங்கவுள்ள மசாபாவுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் கைகொடுத்துள்ளது. இந்த நிறுவனம், மசாபாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதனால், மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகளை ஆதித்ய பிர்லாவின் கடைகளிலும் பெற முடியும். 2022இல் நெட்பிளிக்ஸில் வெளியா

அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்

படம்
  காலமான நடிகை கங் சூ இயோன் நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ ஜங் இ கொரிய படம் ஜங்க் இ கொரியப்படம் – நெட்பிளிக்ஸ் ட்ரெய்ன் டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம்.   பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது. எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப் போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது. இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.   இந்த நிறுவனம் ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான்   யூன் ஜங்கின் மகள்.   தாய் கோமா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே, அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால

பணத்தைப் பின்தொடரும் வன்முறையும் பேராசையும்! - தி டர்னிங் பாய்ன்ட்

படம்
  தி டர்னிங் பாய்ன்ட் தி டர்னிங் பாய்ன்ட் இத்தாலி திரைப்படம் நெட்பிளிக்ஸ்  இத்தாலியில் உள்ள அபார்ட்மெண்ட்டில் முழுப்படமும் நடந்து முடிகிறது. மாஃபியா டான் ஒருவரின் பணத்தை ஜேக் என்ற திருடன் கொள்ளையடிக்கிறான். தப்பிக்கும் முயற்சியில் அவன லூடோ என்ற இளைஞனின் வீட்டுக்கு வருகிறான். ஜேக் ,தான் அங்கு தங்க உதவினால், லூடோவிற்கு பணம் தருவதாக டீல் பேசுகிறான். மாஃபியா டான் தனது பணத்தை பெற எந்த எல்லைக்கும் செல்பவன். பணத்தை திருடன் எளிதாக திருடிப்போக காரணம், அவனது ஆள் என புரிந்துகொண்டு அவனைச் சுட்டுக் கொல்கிறார். இதனால் அடுத்து நாம்தான் என புரிந்துகொள்ளும் டானின் ஆட்கள் இருவர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜேக்கைப் பிடிக்க  வேகமாக தேடி வருகின்றனர். அவர்கள் திருடனைப் பிடித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.  பணத்தை பின்தொடர்ந்து வெறுப்பும், வன்மமும், பேராசையும் எப்படி வருகிறது என்பதுதான் படம் வன்முறை வழியாக காட்டும் மையக்கதை.  ஜேக் பணத்தை ஏன் திருடினான் என்பதை அவனே தனது வாய்மொழியாக லூடோவிடம் சொல்லுமிடம் முக்கியமான காட்சி. ஏறத்தாழ மாஃபியா தலைவனைப் பற்றியும் அவனது கொடூரமான குணத்தை அறிந்த பிறகு, ஜேக் தப்பிச்செல்வ

மனதிலுள்ள உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்கொயட் கேம்! - ஷோபா டே

படம்
  இப்போது உலகமே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஸ்கொயட் கேம்ஸ் என்ற வெப் சீரிசைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சிலர் பார்க்க முடியவில்லை என கூட வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒன்பது எபிசோடுகள் கொண்ட சீரிசை முழுமையாக பார்த்து விஷயங்களை புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கும்.  உலகம் முழுக்க 142 மில்லியன் மக்கள் இந்த வெப் தொடரை பார்த்துள்ளனர். தொடரை இயக்கிய இயக்குநர் ஹூவாங் டாங் ஹூயூக், அதனை சரியாக செய்யவேண்டுமென்ற மன அழுத்தத்தில் பற்கள் கூட விழுந்துவிட்டன என்று பேட்டியில் சொன்னார். தொடரில் ஒவ்வொரு கட்டமும் குழந்தைகளின் விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன.  உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியானது. 45.6 பில்லியன் டாலர்களை வெல்ல குழந்தைகளின் விளையாட்டை விளையாட வேண்டும். பார்த்தால் இந்தியாவின் கௌன் பனேகா குரோர்பதி விளையாட்டு நிகழ்ச்சி போல தோன்றலாம்.  போட்டியில் தோற்றால் வைல்ட்கார்ட் சுற்றெல்லாம் கிடையாது. நேரடியாக சாவுதான். வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். தோற்பவர்கள் உடனே கொல்லப்படுவார்கள். ரத்தம் சொட்டும் திரில்லர், வன்முறை, உணர்ச்சிகரமான காட்சிகளை

வங்கி, நீதிமன்றம், பொழுதுபோக்கு, மருத்துவத்தில் அசத்தும் பெண்கள்! - ஜெயஶ்ரீ வியாஸ், மோனிகா ஷெர்ஜில், மீனா கணேஷ், கருணா நந்தி

படம்
                பெண்களின் வங்கி ! ஜெயஶ்ரீ வியாஸ் மேலாண் இயக்குநர் , ஶ்ரீமகிளா சேவா சகாகரி வங்கி பெரும்பாலான வங்கிகள் நகரங்களை குறிவைத்து தொடங்கப்படுகின்றன . அவற்றின் சேவையும் கூட பெருநிறுவனங்களை மையமாக கொண்டதே . ஆனால் நாம் இங்கே பேசப்போகும் வங்கி ஏழைப்பெண்களின் வாழ்வை மாற்றுதவற்காக நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது . அந்த வங்கியின் பெயர்தான் , ஶ்ரீ மகிளா சேவா சகாகரி . வங்கிகளில் கடன் பெறுவது என்பதைத் தாண்டி , வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு சேமிப்பு காப்பீடு , ஓய்வூதியம் , பொருளாதார அறிவு ஆகியவை தேவைப்படுகின்றன . என்றார் குஜராத் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநரான ஜெயஶ்ரீ வியாஸ் . வங்கியில் தற்போது 300 கோடி இருப்புத்தொகையாக உள்ளது . இருநூறு கோடியை கடனாக வழங்கியுள்ளனர் . ஆறு லட்சம் பயனர்கள் உள்ளனர் . 1.5 லட்சம் கடன் பெறுபவர்கள் உள்ளனர் . தற்போது இந்த வங்கி அனைத்து விஷயங்களையும் டிஜிட்டல் வழியில் செய்ய முனைகிறது . விர்ச்சுவல் வடிவில் பயிற்சிகளை வழங்குவதோடு , பொருளாதார அறிவு பற்றியும் பெண்களுக்கு கற்றுத்தருகின்றனர் . இந்தவகையில் 5 ஆயிரம் பெண்களுக

எந்த வயதினர் படங்களை பார்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு கூட இல்லை! - வாணி திரிபாதி

படம்
                வாணி திரிபாதி திக்கூ திரைப்பட சான்றிதழ் குழு திரைப்படத்துறை தொடர்பான கொள்கை வகுப்பதற்கான ஐடியா எப்படி உருவானது ? திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது அதைச்சார்ந்த விஷயங்கள் பற்றி சேகர் கபூர் என்னிடம் பேசினார் . அதற்குப்பிறகுதான் எனக்கு இதைப்பற்றி கொள்கை வகுப்பது பற்றிய எண்ணம் தோன்றியது . பொதுமுடக்க காலத்தில் மக்கள் இணையம் சார்ந்து ஓடிடி நிகழ்ச்சிகளை பார்க்கத் தொடங்கினர் . இது பொழுதுபோக்குதுறையை மாற்றியுள்ளது . இவையன்றி விளையாட்டு துறை மற்றும் ஏஐ சார்ந்த விஷயங்களையும் மக்கள் பயன்படுத்துகின்றனர் . நாங்கள் இக்காலகட்டத்தில் இதுபற்றி நிறையமுறை பேசி அதுபற்றிய கொள்கைகளை எழுதி உருவாக்கினோம் . இப்போதுள்ள காலகட்டம் டிஜிட்டல் நிகழ்ச்சிகளுக்கு சரியானது . மத்திய அரசு டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது . நீங்கள் அதில் படைப்பு சுதந்திரம் பற்றி எப்படி பேசுகிறீர்கள் ? நாம் இங்கு பார்த்து வரும் பல்வேறு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இன்னும் முறைப்படுத்தவில்லை . பலரும் போதைப்பொருட்கள் , நிர்வாண காட்சிகள் , மோசமான கெட

சினிமா, நாடகம், குறும்படம், ஓடிடி தளம் என எதில் நடித்தாலும் கதைதான் முக்கியம்! -ராதிகா ஆப்தே, நாடக, சினிமா நடிகை

படம்
           ராதிகா ஆப்தே நாடக, சினிமா நடிகை ஓடிடி தளம்தான் உங்களுக்கு பெரிய பிளாட்பாரமாக அமைந்தது . படத்தை விட ஓடிடி பெரியதாக உள்ளதாக நினைக்கிறீர்களா ? சினிமாவிலிருந்து ஓடிடி பக்கள் வெட்கப்ப்டாமல் சென்ற நடிகர்களில் நானும் ஒருத்தி . சேகர்டு கேம்ஸ் , ராட் அகேலி ஹை என்ற படங்கள் கொடுத்த பிரபலம் சினிமாவை விட அதிகம் என்பேன் . நான் நாடகம் , ஓடிடி , படம் , குறும்படம் என எதையும் தீர்மானித்து இயங்குவதில்லை . அதிலுள்ள கதைதான் முக்கியம் . ஓடிடி தளங்கள் நாம் படம் பார்க்கும் முறையை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா ?     பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் . ஆனால் சிறிய படங்களுக்கு அப்படி கிடைக்க அதிக வாய்ப்புகள் இல்லை . தியேட்டருக்கு சென்று பார்க்குமுடியாத மக்களுக்கு ஓடிடி தளங்கள் உதவுகின்றன . நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதற்கு பணம் கொடுத்தால் போதும் . எப்போது படம் பார்க்கவேண்டுமோ அப்போது பார்த்துக்கொள்ளலாம் . இதெல்லாம் உங்களுடைய தேவையைச் சார்ந்ததுதான் . அசாக்தா கலாமன்ச் மூலம் நடத்தப்பட்ட நாடகங்களில் உங்களை பார்த்தோம் . நாடக மேடை நடிப்பை இப்போது எப்படி பார்