பணத்தைப் பின்தொடரும் வன்முறையும் பேராசையும்! - தி டர்னிங் பாய்ன்ட்

 





தி டர்னிங் பாய்ன்ட்


தி டர்னிங் பாய்ன்ட்

இத்தாலி திரைப்படம்

நெட்பிளிக்ஸ் 


இத்தாலியில் உள்ள அபார்ட்மெண்ட்டில் முழுப்படமும் நடந்து முடிகிறது. மாஃபியா டான் ஒருவரின் பணத்தை ஜேக் என்ற திருடன் கொள்ளையடிக்கிறான். தப்பிக்கும் முயற்சியில் அவன லூடோ என்ற இளைஞனின் வீட்டுக்கு வருகிறான். ஜேக் ,தான் அங்கு தங்க உதவினால், லூடோவிற்கு பணம் தருவதாக டீல் பேசுகிறான். மாஃபியா டான் தனது பணத்தை பெற எந்த எல்லைக்கும் செல்பவன். பணத்தை திருடன் எளிதாக திருடிப்போக காரணம், அவனது ஆள் என புரிந்துகொண்டு அவனைச் சுட்டுக் கொல்கிறார்.

இதனால் அடுத்து நாம்தான் என புரிந்துகொள்ளும் டானின் ஆட்கள் இருவர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜேக்கைப் பிடிக்க  வேகமாக தேடி வருகின்றனர். அவர்கள் திருடனைப் பிடித்தார்களா இல்லையா என்பதுதான் கதை. 

பணத்தை பின்தொடர்ந்து வெறுப்பும், வன்மமும், பேராசையும் எப்படி வருகிறது என்பதுதான் படம் வன்முறை வழியாக காட்டும் மையக்கதை. 




ஜேக் பணத்தை ஏன் திருடினான் என்பதை அவனே தனது வாய்மொழியாக லூடோவிடம் சொல்லுமிடம் முக்கியமான காட்சி. ஏறத்தாழ மாஃபியா தலைவனைப் பற்றியும் அவனது கொடூரமான குணத்தை அறிந்த பிறகு, ஜேக் தப்பிச்செல்வது கடினம் என பார்வையாளர்களுக்கு மனதில் பதிவாகிவிடுகிறது. இந்த நிலையில் அவனுக்கும் ஓரளவு நிலைமை அர்த்தமாகிறது. 

லூடோ தன்னம்பிக்கை இல்லாமல் பேனிக் அட்டாக் பிரச்னையில் தடுமாறுகிறான். நண்பர்கள் இல்லை, தோழி இல்லை. காதலி இல்லை. தனியாக அவனும் அவன் வரையும் திரில்லர் காமிக்ஸ் மட்டுமே உள்ளது. அதைக்கூட அவனால் தைரியமாக அப்பாவிடம் கூற முடியவில்லை. அந்தளவு தன்னம்பிக்கை இல்லாமல் தவிக்கிறான். இதனால் கண்ணெதிரே பார்க்கும் பெண்ணிடம் கூட பேச முடியாமல் தயங்குகிறான். இதை உணர்ந்த ஜேக், அவனுக்கு மெல்ல தன்னம்பிக்கை கொடுத்து பேசுகிறான். அவனை தைரியப்படுத்துகிறான். 

ஜேக்கிற்கு பிரேசிலில் உள்ள அண்ணனைப் போய் பார்க்க ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு குடியிருப்பு கட்டிடத்தை தாண்ட வேண்டுமே?

ஜேக்கின் எதிர்பாராத நட்பு, லூடோவின் வாழ்க்கையை எப்படி உடைத்து நொறுக்கிப் போடுகிறது என்பது தான் படத்தின் இறுதிக்காட்சி. அதை ஜேக் உணர்ந்து வலியால் துடித்து குற்றவுணர்ச்சியால் தடுமாறி தனது உயிரை விடுகிறான். அவனின் பிரேசில் செல்லும் கனவும் அதோடு கரைந்து போகிறது. 


கோமாளிமேடை டீம் 









The Turning Point

Italian La svolta
Directed by Riccardo Antonaroli
Written by

Roberto Cimpanelli
Gabriele Scarfone



கருத்துகள்