தினசரி வாழ்க்கையில் பயன்படும் இயந்திரங்கள்!

 










எளிமையான இயந்திரங்கள் 

நாம் தினசரி வாழ்க்கையில் நிறைய எளிமையான இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். அதன் கண்டுபிடிப்புக்கு பின்னே பெரிய இயற்பியல், வேதியியல் தத்துவங்கள் இருக்கும்.  ஆனால் அத்தனையும் உள்வாங்கித்தான் மக்கள் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. இவற்றின் பின்னே உள்ள அறிவியலை அறிந்துகொள்வது நாம் செய்யும் செயலை சுவாரசியமாக்கும். 

சுத்தியலை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் ஒருமுறை ஆணிகளை அடிப்பது போலவும், இன்னொருபுறம் சற்றே வளைந்தது போல இருக்கும். இதனை சற்றே ஆற்றலைப் பயன்படுத்தினால் போதும், எளிதாக ஆணியை சுவரில், மரத்தில் அடிக்க முடியும். வேறு பொருட்களைப் பயன்படுத்துவதை விட சுத்தியல் எளிதாகவும் வேகமாகவும் ஆணியை அடிக்கவும், சுவரில் இருந்து அதனை அகற்றவும் உதவுகிறது. 

டூல்ஸ், லிவர்ஸ், புல்லிஸ் என இவற்றைத்தான் எளிமையான இயந்திரங்கள் என்று கூறுகிறோம். இவற்றில் நீங்கள் குறைந்த அளவு அழுத்தம் கொடுத்தால், அது இன்னும் கூடுதலாக அதிகரிக்கும். 

லிவர்ஸ், என்பதும் இந்த வகையில் சேரும். இதில் குறைந்த அளவு ஆற்றலை செலுத்தினால், சுமையை எளிதாக கொண்டு செல்ல முடியும். தள்ளுவண்டியை இந்த வகையில் சேர்க்கலாம். வீல்பாரோ, இந்த வகையில் சுமையை எளிதாக கொண்டு செல்ல உதவும். 

கத்தரிக்கோல், சாப்ஸ்டிக், சுமைதூக்கும் வண்டி எல்லாம் லிவர் வகையில் சேரும். 

புலேஸ் வகை இயந்திரங்கள் அதிக எடைகளை தூக்க பயன்படுகின்றன. கிரேன்களை இந்த வகையில் கூறலாம். 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்