புவியியல் தகவல்கள்!

 












தெரியுமா?



”பூமியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஒத்தது” என்றார்  புவி வேதியியலாளரான பால் அசிமோவ். இதன் தோராய வெப்பநிலை 5,537 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

பூமியில் மொத்தமாக 40 டெராவாட்ஸ் (terrawatts) வெப்பம் உருவாகிறது. இதன் மையப்பகுதியில் இருந்து கதிரியக்கத் தன்மை காரணமாக வெப்பம் உருவாகிறது என 2011இல் வெளியான ஆய்வு கூறுகிறது. மையப்பகுதியில் ஆன்டிநியூட்ரினோ (antineutrinos)என்ற துகள் காணப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கதிரியக்கமே வெப்பத்திற்கு காரணம் என புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். 

"பூமியின் உட்புறத்திலிருந்து வரும் வெப்ப ஆற்றலே அதனை உயிரோட்டமாக வைத்துள்ளது என்றார் அமெரிக்க புவியியல் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் டாம் கிராஃபோர்டு.  தோரியம், யுரேனியம், பொட்டாசியம் " ஆகிய தனிமங்களின் கதிரியக்க தன்மையால் பூமியில் வெப்பம் உருவாகிறது. 

உலகமெங்கும் உள்ள பாலைவன தரைகளில் பாசிகள் (mosses) வாழ்கின்றன. இவை தன்னுடைய தனித்துவமாக மூலக்கூறு அமைப்பு காரணமாக காற்றிலிருந்து நீரைப் பெற்று உயிர்வாழ்கின்றன. தனித்துவமான இலைகள் போன்ற அமைப்புக்கு ஆன்ஸ் (awns)  என்று பெயர்.  வறண்ட நிலப்பரப்புகளில் பாசிகள் உயிருடன் தாக்குப்பிடித்து வாழ்வது உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்றுதான் என்றார்  சூழலியலாளர் சாஷா ரீட். 

2100ஆம் ஆண்டில் கடல்நீர் மட்டம் 2 அடி உயரத்திற்கு உயரும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். “கடல்நீர் மட்டம் இரண்டு அடி உயரும்போது, கடல்நீரில் அமைந்துள்ள தீவுகள், கடற்கரைகள்  பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்றார் சூழல் அறிவியலாளர்  டாபியோ ஸ்னைடர். 

தகவல்

https://www.popularmechanics.com/science/environment/g32107914/earth-strange-facts/?slide=1

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்