போரில் கிடைத்த வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்!

 







ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி இரண்டு மாதங்களாகிவிட்டது. இதுதொடர்பாக நிறைய வார்த்தைகளை நாம் கேட்டுவருகிறோம். அதைப்பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம். 

கொய்ட் quit

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம் என்ற நிறைய நாடுகள் முடிவெடுக்க நினைத்தன. அப்படி செய்தால் போர் நின்றுவிடுமே என ஐரோப்பிய யூனியன் கூட ரஷ்யாவின் நிலக்கரியை மட்டும் பயன்படுத்த மாட்டோம் என கறாராக கூறிவிட்டது. 

நாடோ nato

உக்ரைன் ஐரோப்பாவின் நாடோ படையில் சேரக்கூடாது என்பதுதான் ரஷ்யாவின் பயம். அதற்காகவே உக்ரைனை தாக்கி அதனை சல்லி சல்லியாக நொறுக்கி வருகிறது. ஆனால் ரஷ்யாவின் வேகத்தில் இதுவரை நாடோவில் சேராமலிருந்த ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளும் கூட சேர்ந்தால்தான் என்ன என்ற முடிவுக்கு வந்துவிட்டன. 

ஷி ஜின்பிங் xi jinping

சீனா, இல்லாமல் இனி உலகில் எதுதான் நடந்துவிடும். இதன் நிரந்தர அதிபரான ஷி, எப்போதும் போல ரஷ்யாவை ஆதரிக்கிறார். ஒருவகையில் சீனாவின் இந்த ஆதரவுநிலையால் தைவான், ஹாங்காங் ஆகிய நகரங்கள் அடுத்தது நாமதானோ என பீதியில் உள்ளன. 

லூகாசென்கோ lukashenko

இவர் பெலாரஸ் நாட்டின் சர்வாதிகாரி அலெக்ஸாண்டர் லூகாசென்கோ, புதினுடன் நெருக்கமாக உள்ளார். அவரின் அணியில் உள்ள நண்பரும் கூட. 

இசட் z

ரஷ்யாவின் ராணுவ வாகனங்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து இதுதான். சிறிய எழுத்து, பெரிய எழுத்து அளவு வேறுபடும். பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். 

tzr.io




கருத்துகள்