இடுகைகள்

நீரஜ் கெய்வான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறர் என்ன சொல்வார்களோ என்று எனது தலித் அடையாளத்தை மறைத்து வைத்தேன்! - நீரஜ் கெய்வான்

படம்
              நீரஜ் கெய்வான் இந்தி திரைப்பட இயக்குநர் கீலி புச்சி எனும் கதை உங்களுடைய தேசிய விருது வென்ற படமாக மாசானில் இடம்பெற்றதுதான் . அதனை சிறிய படமாக எப்படி உருவாக்கத் தோன்றியது ? வருண் குரோவரோடு கதையை எழுதும்போது , மேற்சொன்ன கதை மாசான் படத்திற்கு அதிக கனம் கொண்டதாக தோன்றியது . தர்மேட்டிக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு இந்த கதையை உருவாக்கினோம் . இதில் நாயகர்கள் , எதிர்மறை நாயகர்கள் என யாரும் கிடையாது . ஒருவரின் குணநலன்களேதான இதில் எதிர்மறையாக பலவீனமாக மாறும் . சிறுபான்மை சமூகம் இன்றும் தங்களது வேலை , வாழ்க்கைக்காக போராடி வருகிறது . இதனை நாம் சற்று தனிமைப்படுத்தி பார்க்கவேண்டும் . சாதி வேறுபாடுகளை எப்படி வேறுபடுத்தி காட்டினீர்கள் ? இந்த விவகாரம் பற்றி நமக்கு முழுமையாக தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் . நான் பெண்களைப்பற்றி பேசினாலும் கூட ஆண்களால் அவர்களின் மாதவிடாய் வலியை உணர முடியாது என்பதே உண்மை . இதைப்போலத்தான் குழந்தைப் பிறப்பும் , பணியிடம் சார்ந்த தீண்டாமையும் கூட . இந்த ஐடியாவை நாங்கள் சிறுபான்மை சமூகத்துடன் இணைத்து எழுதினோம் . மெனோ