இடுகைகள்

டிமென்ஷியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆர்கனாய்டு மினி ப்ரெய்ன் ஆராய்ச்சி! - ஆட்டிசம், அல்சீமர், டிமென்ஷியா குறைபாடுகளை தீர்க்கலாம்!

படம்
  cc மூளை ஆராய்ச்சி     மினி மூளை ஆராய்ச்சி ஆட்டிசம், அல்சீமர், சிசோபெரெனியா ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் மூளை முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகளவில் நடைபெறுவதில் உள்ள சிக்கல், அதன் அமைப்புதான். இப்போது அத்தடைகளையும் தாண்டி அதனை ஆய்வகத்தில் வளர்க்க முய்ன்று வருகிறார்கள். கேம்பிரிட்ஜிலுள்ள மூலக்கூறு உயிரியல் பிரிவு பேராசிரியர் மேடலின் லான்காஸ்டர் என்ற பெண்மணி, மூளையிலுள்ள ஸ்டெம்செல்களை தனியாக பிரித்து வைத்து அதனை ஆராய்ந்து வருகிறார். வியன்னாவில் முதுகலைபடிப்பிற்கு செய்த ஆராய்ச்சியின் போது விபத்தாக மூளை ஆராய்ச்சியை செய்யும் நோக்கம் தொடங்கியிருக்கிறது. கருப்பையில் மூளை எப்படி வளருகிறது என்பதைப் பற்றித்தான் லான்காஸ்டர் முதலில் ஆராய்ச்சி செய்தார். பின்னர்தான், அது மூளையை தனியாக ஆய்வகத்தில் வளர்க்கும் நோக்கத்தில் வந்து நின்றது. ஆர்கனாய்டுகளை ஆராய்ந்து வந்த லான்காஸ்டர் இப்போது மெல்ல மூளையை ஆய்வகத்தில் வளர்த்து அதன் புதிர்தன்மையை காண முயன்று வருகிறார். பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கூட நாம் மூளையின் வளர்ச்சியைத்தான் பார்க்க முடியும். ஆனால் அதில் உள்ளே வர

தலையில் பந்தை முட்டினால் நினைவிழப்பு குறைபாடு ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கால்பந்தை தலையில் முட்டி விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். தற்போது ஆராய்ச்சியாளர்கள் அப்படி விளையாடுவதை ஆபத்து என்கிறார்களே? ஸ்காட்லாந்து நாட்டில் பன்னிரண்டுக்கு வயதுக்கு குறைவான சிறுவர்கள் கால்பந்தை தலையில் முட்டி விளையாடக்கூடாது என்று தடை விதிக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம், தலையில் முட்டி விளையாடும்போது, மூளை பாதிக்கப்பட்டு டிமென்ஷியா எனும் நினைவிழப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஆஸ்டில் ஃபிபா கோப்பையில் பங்கேற்றவர். இவர் விளையாட்டில் ஏற்பட்ட காயங்களால், 59 வயதில் தன் மகளின் வீட்டில் இறந்துபோனார். இவரின் தலையை ஆராய்ச்சி செய்தபோது, குத்துச்சண்டை வீர ர்களுக்கு தலையில் ஏற்படும் சிடிஇ எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். காரணம், கால்பந்து விளையாட்டில் வேகமாக வரும் வந்தை தலையில் முட்டி கோல் அடிப்பதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரண மக்களை விட கால்பந்து வீரர்கள் 3.5 மடங்கு டிமென்சியா குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. டாக்டர் வில்லி ஸ்டீவர்ட் என்பவர்