இடுகைகள்

ஆர்சனிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்திரமான செக்ஸை அனுமதிக்காத ஆண்களுக்கு ஆர்சனிக் விஷமே பரிசு!

படம்
  நாஜிரெவ் என்ற ஊரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திஸா என்ற ஆற்றின் வழித்தடத்தில் உள்ள புதாபெ|ஸ்டிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நாஜிரெவ் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் ஒரே ஒரு பெண்தான். அவர் பெயர், ஜூலியா ஃபாஸேகஸ். கணவர் இறந்துவிட்டார் என கிராமத்திற்கு திரும்பி வந்தவரான   ஜூலியாவிடம்,   உறவினர்கள் கணவரின் இறப்பு பற்றி அதிகம் விசாரிக்கவில்லை. அதை சரியாக அறிந்திருந்தால் சற்று கவனமாக இருந்திருக்கலாம். செவிலியராகப் பணியாற்றிய காலத்திலேயே ஜூலியா, சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு கருக்கலைப்புகளை செய்தார். அதன் விளைவாக, நீதிமன்றத்தால் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். ஆனால் பெண் என்று நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்போது சற்று தயை காட்டினர். பிறரின் கருணை பற்றியெல்லாம் ஜூலியா எப்போதும் கவலைப்படவில்லை. பிரச்னை என வருபவர்களுக்கு, கணவர் பற்றி புலம்புபவர்களுக்கு கையிலேயே நிரந்தரமான தீர்வை கொடுத்துவிட்டார். இதற்கான விளைவாக ஏராளமான மரணங்கள் நடந்தன. முதல் உலகப்போரில் பிடிபட்ட வீர்ர்களை அடைத்து வைக்க நாஜிரெவ் கிராமம் சரியான இடமாக ராணுவத்தினரால் அடையாளம் க