இடுகைகள்

மம்தா பானர்ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேற்கு வங்கத்தை காக்கும் அக்காவும், உலக வங்கியின் நிர்வாக தலைவரான பெண்மணியும்!

படம்
  மம்தா பானர்ஜி  மம்தா பானர்ஜி  அரசியல் தலைவர், மேற்கு வங்கம்.  முதலில் மாநில கட்சியாக இருந்தவர், இப்போது தேசிய கட்சியாக மாறிவிட பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதற்கான பயன்கள் என்ன என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்.  கருத்துகளையும் முடிவுகளை எடுப்பதில் துணிச்சலானவர் என்று பெயர் பெற்றவர் மம்தா பானர்ஜி. செல்லமாக தீதி. அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர். மேற்குவங்கத்தின் முதல்வராக இருக்கிறார்.  தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி தொண்டராக தொடங்கினார். மேற்கு வங்கத்தில் இருந்த இடதுசாரி கட்சியை உடைத்து தனது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த தற்கு நிறைய இழந்திருக்கிறார். வன்முறையை எதிர்கொண்டிருக்கிறார். இடதுசாரி குண்டர்களின் தாக்குதலில் மண்டையே கூட உடைந்து போயிருக்கிறது. அத்தனையும் பொறுத்துக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தபிறகு திருப்பி கொடுத்தார். மம்தாவின் ஆளுமை, அதிரடிகளால் இடதுசாரிகள் இன்றுவரை மேற்கு வங்கத்தில் எழ முடியவில்லை.  காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மந்திரியாக பொறுப்பு வகித்திருக்கிறார். ராஜீவ்காந்தியின் ஆதரவாளராக இருந்தவர், அவர் குண்டுவெ

மக்களுக்காக போராடி அன்பை வென்ற மேற்குவங்க பெண்மணி! - மம்தா பானர்ஜி

படம்
  தீதி மம்தா பானர்ஜி சுடாபா பால் பெங்குவின் வெளியீடு மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதல்வரான முதல் பெண் முதல்வர் மம்தா பானர்ஜி. இவரது வாழ்க்கை சிறுவயதில் எப்படி இருந்தது என்பதை எளிமையான முறையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூல் மம்தாவின் புகழ்பாடும் வகையைப் பின்பற்றவில்லை. மம்தா எழுதிய நூல், வேறு நூல்கள் பல்வேறு நூல்களைப் படித்து பல்வேறு தகவல்களை கோர்வையாக கொடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் எப்படி அதிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி காங்கிரஸ், இடதுசாரி கட்சியை எதிர்க்கட்சி இருக்கைக்கு தள்ளினார் என்பதோடு, மம்தா முதல்வர் இருக்கையில் இருந்தபோது செய்த தவறுகளையும் கூறியுள்ளார்.  மம்தா பானர்ஜியை மக்களுக்கான தலைவர் என எளிதாக கூறலாம். அனைத்து போராட்டங்களிலும் மக்களின் மீது காவலர்களின் தடி படும் முன்னர் இவரது உடலில் பட்டுவிடும். அந்தளவு மக்களுக்காக ஏராளமான போராட்டங்களை செய்துள்ளார். இதன் காரணமாக தலையில் அடிபட்டு அதன் விளைவாக  மம்தாவின் குணநலன்களே மாறிவிட்டன என்றும் கூறப்படுகிறது.  மம்தா பா

மேற்குவங்கத்தில் மம்தாவை காப்பாற்றப் போகும் திட்டங்கள் என்னென்ன?

படம்
        முதல்வர் மம்தா   மேற்குவங்கத் தேர்தலுக்காக அங்கு பல்வேறு கட்சிகள் வாக்குகளைப் பெற போட்டா போட்டி போட்டு வருகி்ன்றன . முதல்வர் மம்தா அங்கு என்னென்ன திட்டங்களை தீட்டியிருக்கிறார் என்று பார்ப்போம் . கன்யாஶ்ரீ 13-21 வயது வரையிலான பெண்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ . 1000 வழங்கப்படுகிறது . பதினெட்டு வயதை எட்டிய பெண்களுக்கு ரூ .25000 நிதியுதவி வழங்கப்படுகிறது . இம்முறையில் அரசு 7 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது . இதில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றுள்ளனர் . காத்யா சதி மலிவு விலையில் அரசி வழங்கும் திட்டம் . ஒரு கிலோ அரிசி ரூ .2 க்கு வழங்கப்படுகிறது . இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி . கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயன் பெறுகிறார்கள் . ஸ்வஸ்திய சதி ஆண்டுக்கு 1.5 முதல் 5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம் அரசு மக்களுக்கு வழங்குகிறது . நடப்பு ஆண்டில் இதற்கு 906 கோடி ரூபாய் செலவாகியுள்ளது . ஜெய்ஜோகர் அண்டு தபோசிலி பந்து ஆதி திராவிடர்கள் , பழங்குடியினருக்கு மாதம் ரூ . 1000 வழங்கப்படுகிறது . ஆண்