இடுகைகள்

காலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நூல் - டெய்லி ரிச்சுவல்

படம்
 டெய்லி ரிச்சுவல்  மாசன் குரே சுயமுன்னேற்ற நூல் 171 பக்கம் தினசரி சடங்கு என கலைஞர்களுக்கு என்ன இருக்கும்? கட்டுரை, நாவல், ஓவியம், திரைப்படம் இதுதானே? அதை எப்படி உருவாக்குகிறார்கள், அதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என்பதுதான் நூலின் மையப்பொருள்.  நூலில் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கட்டுமான கலைஞர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள் தங்களின் பழக்க வழக்கம் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே தங்களைப் பற்றி கூறுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றி சுயசரிதை எழுதும் பத்திரிகையாளர்கள் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். நூலை வாசிப்பவர்களுக்கு தேவையான குறிப்புகளும் கூட நூலின் பின்பக்கத்தில் உள்ளது. நூல்களை தேடி எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.  சில எழுத்தாளர்கள் திருமணம் செய்தாலும் கூட எழுத்தாளராக சாதிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காகவே ஒருவர் வேலைக்கு செல்வது இன்னொருவர் எழுதுவது என திட்டமிடுகிறார்கள். அதில் ஒருவர் வெற்றி பெறுகிறார், இன்னொருவர் தோல்வியுறுகிறார். இந்தவகையில் எழுத்தாளர் கார்சன், ரீவ்ஸ் ஜோடியில் கார்சன் வெற்றிபெறுகிறார். அதாவத...

வெப்ப வாயு பலூன்களில் பயணம்!

படம்
  வெப்ப வாயு பலூன்கள்! இந்த பலூன்கள் ஆகாய விமானங்கள் போன்றவை அல்ல. வானத்தில் மெல்ல காற்றில் அசைந்தாடித்தான் பயணிக்கும். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜோசப் மிச்செல் ஜாக்குயிஸ் மான்ட்கோல்ஃப்பையர் என்ற இரு சகோதரர்கள் வெப்ப வாயு பலூனை உருவாக்கினர். 1793ஆம்ஆண்டு இதனை உருவாக்கி பறக்க வைத்தனர்.  பட்டு மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி பலூனை உருவாக்கினர். இன்று உருவாக்கப்படும் பலூன்களுக்கு நைலான், பாலியஸ்டர் இழைகள் அடிப்படையானவை. இதில் நெருப்பு பிடிக்காமலிருக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெப்பவாயு விடுவிக்கப்பட, அந்த இடத்திலுள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது.  இதனால், வெளியிலுள்ள குளிர்ந்த காற்று தரும் அழுத்தத்தில் பலூன் நகர்கிறது. இதனால் பலூன் மேல்நோக்கி (upthrust) உந்தப்படுகிறது.  ஜெர்மனியில் பறக்கும் கப்பல் (Air ship) உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஹீலியம் வாயுவால் இயக்கப்படுகிறது. வெப்பமான காற்றைப் போல, ஹீலியம் வாயுவும் அடர்த்தி குறைவானது. இதன் காரணமாகவே பறக்கும் கப்பலும் வானில் பயணிக்கிறது. இதில் திசையைத் தீர்மானிக்க புரப்பல்லர் இயந்திரங்கள் உள்ளன. காற்று வேகமாக அடிக்கும் சூழல...