வெப்ப வாயு பலூன்களில் பயணம்!
வெப்ப வாயு பலூன்கள்!
இந்த பலூன்கள் ஆகாய விமானங்கள் போன்றவை அல்ல. வானத்தில் மெல்ல காற்றில் அசைந்தாடித்தான் பயணிக்கும். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜோசப் மிச்செல் ஜாக்குயிஸ் மான்ட்கோல்ஃப்பையர் என்ற இரு சகோதரர்கள் வெப்ப வாயு பலூனை உருவாக்கினர். 1793ஆம்ஆண்டு இதனை உருவாக்கி பறக்க வைத்தனர்.
பட்டு மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி பலூனை உருவாக்கினர். இன்று உருவாக்கப்படும் பலூன்களுக்கு நைலான், பாலியஸ்டர் இழைகள் அடிப்படையானவை. இதில் நெருப்பு பிடிக்காமலிருக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெப்பவாயு விடுவிக்கப்பட, அந்த இடத்திலுள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. இதனால், வெளியிலுள்ள குளிர்ந்த காற்று தரும் அழுத்தத்தில் பலூன் நகர்கிறது. இதனால் பலூன் மேல்நோக்கி (upthrust) உந்தப்படுகிறது.
ஜெர்மனியில் பறக்கும் கப்பல் (Air ship) உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஹீலியம் வாயுவால் இயக்கப்படுகிறது. வெப்பமான காற்றைப் போல, ஹீலியம் வாயுவும் அடர்த்தி குறைவானது. இதன் காரணமாகவே பறக்கும் கப்பலும் வானில் பயணிக்கிறது. இதில் திசையைத் தீர்மானிக்க புரப்பல்லர் இயந்திரங்கள் உள்ளன. காற்று வேகமாக அடிக்கும் சூழலில் இந்த இயந்திரங்கள் திசையை தீர்மானித்து தடுமாறாமல் செல்ல உதவுகின்றன.
வெப்ப வாயு பலூன்கள் சூரிய உதயம், சூரியன் மறையும் வேளை ஆகிய இரு சமயங்களில் மட்டுமே பறக்கவிடப்படுகின்றன. இந்த நேரங்களில் வெப்பநிலை சற்று குளிர்ந்த தன்மை கொண்டிருக்கும். இதனால் பலூன்களை எளிதாக பறக்க வைக்க முடியும்.
Super Science Encyclopedia
கருத்துகள்
கருத்துரையிடுக