இடுகைகள்

சதவீதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் தகவல்களை வெளிப்படுத்தும் வழிகள் - பை சார்ட், அட்டவணை, டயகிராம்

படம்
  தகவல்களை எப்படி வெளியே கூறி விளக்குவது? அறிவியல் சம்பந்தமான தகவல்களை எழுத்துக்களாக பத்தி பத்தியாக எழுதி ரிசர்ச்கேட் வலைத்தள கட்டுரை போல விளக்கினால் படிக்கும்போதே பலருக்கும் தூக்கம் வந்துவிடும். இதை தடுக்கவே பல்வேறு படங்கள், அட்டவணைகள் உதவுகின்றன. பொதுவாக அறிவியல் சோதனைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள், அளவுகள் ஆகியவற்றை டேட்டா என்கிறார்கள். தமிழில் தகவல்.  பொதுவாக பங்குச்சந்தை, பணவீக்கம் ஆகியவற்றின்  ஏற்ற இறக்கங்களை கிராப் வடிவில் சொல்லுவார்கள். இந்த வடிவில் ஏற்ற இறக்கங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும். அனைத்து தகவல்களையும் இதே வடிவில் சொல்ல முடியாது.  பை சார்ட் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது ஒரு ரூபாயில் வரவு செலவுகளை இந்த வகையில் சொல்லுவார்கள். இதனை பார்த்தாலே எளிதாக ஆண்டின் நிதி அறிக்கை எந்த லட்சணத்தில் இருக்கிறது என அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக எந்த அளவு, சந்தையில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, வருமான அளவு ஆகியவற்றை பை சார்ட் மூலம் புரிந்துகொள்ளலாம். நோய்த்தாக்குதல் அளவு, வறுமையில் உள்ள மக்களின் அளவு ஆகியவற்றை சதவீத அடிப்படையில் எளிதாக புரிந்துகொள்ளலாம்.  நூறுகிராம்