இடுகைகள்

குஜராத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரிய ஒளி, ஆக்சிஜன் பட்டால் மட்கிப்போகும் பிளாஸ்டிக்!

படம்
  செய்திஜாம் ஆஹா! மறுசுழற்சி! சூரிய ஒளி பட்டாலே மட்கும் வகையில் புதிய பிளாஸ்டிக் வகையை சீனாவின்  ஹூவாஸாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள தனித்துவமான மூலக்கூறுகள் ஒளி, தண்ணீர் பட்டால்  உடனே ஒரே வாரத்தில் மட்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்படி மட்கும்போது சக்சினிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதனை மருந்து தயாரிப்பில் அல்லது உணவு உற்பத்தியில் பயன்படுத்தமுடியும். இந்த பிளாஸ்டிக் ஆராய்ச்சி பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  https://www.indiatimes.com/technology/science-and-future/plastic-sunlight-disintegration-one-week-544896.html வெள்ளத்தில் நகரம்! மழை வெள்ளத்தில் சாலைகள் மிதக்கும் காட்சி! இடம், ஜெர்மனி, பிளெஸ்ஸம் அப்படியா! பற்றாக்குறை! குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்ச்சியானார்கள். இதனால் அங்குள்ள 20 மாவட்டங்களில் 3000 கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பள்ளி தலைமையாசிரியர், கூடுதல் மாணவர்களை படிக்க வைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை முறை, ஷிப்ட் முறை ஆகியவற்றை பின்பற்றலாம் என

உண்மையைத் தேடி-- அமித்தை சுட்டுக்கொன்ற பாஜக எம்.பி

படம்
தகவல் உரிமைச்சட்டத்தை பயன்படுத்துபவர்கள் இன்று பலரும் ஆளும் அரசின் ஆதரவுடன் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இப்படித்தான் குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு தகவல்உரிமை செயற்பாட்டாளர், சுட்டுக்கொல்லப்பட்டார். அதுவும் கொலை செய்யப்பட்டது, வழக்குரைஞரும் செயற்பாட்டாளருமான அமித் ஜெதவா என்பதோடு, கொலை நடந்த இடம் உயர் நீதிமன்ற வளாகம் ஆகும். தற்போது இக்கொலைக்கு காரணமான பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் தினு போகா சோலன்கிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோலன்கி தன்னுடைய ஜூனாகத், கிர் சோம்நாத் ஆகிய மாவட்டங்களில் செல்வாக்கு கொண்டவர். வணிகத்திற்கு ஏற்றமாதிரி சட்டதிட்டங்களை மாற்றி வந்த பாஜக அரசின் தில்லுமுல்லுகளை அவர்களின் சட்டம் மூலமே கேள்வி கேட்டு மனு போட்டு பதில் பெற்று வழக்கு தொடர்ந்து வந்தார் அமித். அரசியல்வாதியாக இருப்பவர்கள் நிறைய தொழில்களை நடத்தினால்தானே காசு பார்க்க முடியும். சோலன்கி குஜராத்தில் செய்யாத தொழில்கள் கிடையாது. சுரங்கம், பெட்ரோல் முதல் ஐஸ் ஃபேக்டரிகள் வரை நடத்தி வந்தார். இதில் அமித்துக்கும் சோலன்கிக்கும் முட்டிக்கொண்டது குறிப்பிட்ட வழக்கில்தான். சோலன்கியின

இந்திய அரசின் இ சந்தை! - வெளிப்படையான அரசு சந்தை!

படம்
அரசின் இ சந்தை - GeM இந்திய அரசு, அரசுத்துறைகளுக்கான பொருட்களை அனைவரும் அறியும்படி எளிய முறையில் வாங்குவதற்கான சந்தையை தொடங்கியுள்ளது. இதற்குப் பெயர் GeM ஆகும். பல்வேறு கட்டங்களாக இ சந்தை வலைத்தளத்தை அரசு மேம்படுத்தி வருகிறது. சிறு,குறு தொழில்களை செய்து வருபவர்கள், இத்தளத்தில் வியாபாரியாக பதிவு செய்துகொண்டு பொருட்களை அரசு துறைகளுக்கு விற்று பயன் பெறலாம். நோக்கம்! அரசின் இ சந்தை வலைத்தளத்திற்கான திட்டவரைவு 2016- 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று, இ சந்தைக்கான திட்ட வரைவை வெளியிட்டார்.  வெளிப்படையான முறையில் சரியான விலையில் பொருட்களை அரசுத்துறைக்கு கொள்முதல் செய்யும் சிந்தனையில் அரசின் இ சந்தை உருவாகியுள்ளது. இதன் இயக்குநராக பொதுத்துறையில் 32 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திரு. தலீன் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், கோல்கட்டாவின் வருவாய்துறையில் நிதியை உயர்த்த பாடுபட்டுள்ளார்.  இந்திய மாநிலங்களிலுள்ள பொருளாதார மையங்களை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். செயல்பாடு! இதில் இணைந்துள்ள வியா

மதுத்தடை வளர்ச்சியை குலைக்கும் - சேட்டன் பகத்!

படம்
giphy.com நான் மதுத்தடை தவறு என்று சொல்வதற்காக வருத்தப்படவில்லை. முக்கியமான குறிப்பு, நான் மது அருந்துபவனல்ல. குஜராத்தில் இன்றும் மதுவுக்கு தடை உள்ளது. காந்தி போர்பந்தரில் பிறந்ததால் அரசு அவருக்கு மரியாதை செய்வதற்காக இத்தடையை நீக்காமல் அப்படியே பெயரளவுக்கு காப்பாற்றி வருகிறது. மணிப்பூர், மிசோரம், ஏன் கேரளத்தில் கூட மது தடை அமலாகி பின் கைவிடப்பட்டது. இந்தியர்கள் பொதுவாக சிக்கலான பிரச்னைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு நட்பை வளர்க்கிறார்கள். நான் அதைக் குறையாக கூறவில்லை. முக்கிய விவகாரங்களில்  அவர்கள் சரியான அதிரடி முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும். மது தடை என்ற முடிவை நான் எதிர்க்கிறேன். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானது என்று உறுதியாக நம்புகிறேன். உண்பது, உடுப்பது, வணங்குவது போன்ற விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து. மது தடையால் குஜராத் அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கிறது. இதற்காக மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இது தவறான முறைதானே? மது விற்பது என்பதும், அதன

வேறுபாடுகளை மறப்போம்! - சேட்டன் பகத்

படம்
நான் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஏன் இப்போது திடீரென அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், இந்துக்கள் எரித்துக்கொல்லப்பட்ட அடுத்தடுத்த நாட்களில் முஸ்லீம்கள் அதேபோல தாக்கி கொல்லப்பட்டார்கள். இதற்கான பழி இருதரப்பிலும் போடப்பட்டது. வசைமாரி தூற்றப்பட்டது. இன்றுவரையிலும் இதற்கான காரணம் இவர், அவர் என ஆட்காட்டி விரல்கள் மாற்றி மாற்றி காட்டப்பட்டு வருகிறது. இந்த சொற்களும் ஆவேசமும் எனக்கு உறுதிப்படுத்துவது நாம் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் ஏராளமான பிளவுகளைக் கொண்டு ஒற்றுமையாக இல்லை என்பதுதான். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நான் நிச்சயம் ஏற்பதில்லை. சில விஷமிகள் இன்று சாப்பிடும் உணவைப் பற்றிக்கூட சர்ச்சையாக்கி ஒருவரை தாக்கி கொல்லமுடிகிறது என்றால் வெறுப்பு எப்படி தீயாக பரவுகிறது பாருங்கள். எளிமையான மேடைப்பேச்சு இதனை கிளறி விட போதுமானது. அப்படியென்றால் நமது மனதில் இதுபற்றிய கருத்தும், அதற்கான பதிலடியும் தயாராகவே இருக்கிறது. கண்ணுக்கு கண் என்ற பழிக்குப்பழி வெறி நம்மை மதம் சார்

புதிய இரும்பு மனிதர்: மோடி - குற்றச்சாட்டுக்களை உடைக்கும் ஆசிரியர்

படம்
நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் அரவிந்தன் நீலகண்டன் கிழக்கு டோனி ஜா படத்தின் ஆரம்பம் போல ஒரு காட்சி. அகழியில் முதலை உள்ளது. அதைக் கடந்து மரத்தின் மேலேறி காவிக்கொடியை கட்டவேண்டும். அதை கட்ட பலரும் தயங்க ஒரு சிறுவனம் தயங்காமல் மேலேறி அதை செய்கிறான். வேறுயார்? இந்தியாவின் பிரேக்கை கழற்றி போட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையில் தள்ளிக்கொண்டிருக்கிறாரே அவரேதான். நம் தற்போதைய பிரதமர் மோடியின் கதை இது. இதோடு ஆர்எஸ்எஸ்ஸின் தோற்றம், மருத்துவர் கேசவபலிராம் ஹெட்கேவர், சதாசிவ கோல்வல்கர், தேவரஸ் ஆகியோரின் வாழ்க்கையும் இதில் உள்ளது. ஆனால் மோடியைக் கவனிக்கவேண்டும் என்பதால் அனைத்தையும் வெட்டிவிட்டார்கள். தீன் தயாள் உபாத்தியாயவை தன் லட்சிய புருஷராக வழிபட்டுக்கொண்டிருந்தவர் மோடி. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஏன் தீன் தயாள் உபாத்யாய பெயர் என விளங்காதவர்களுக்கு இப்போது நன்றாக புரிந்திருக்கும். மோடி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிற நூல் இது. ரயில் நிலையத்தில் டீ விற்கிறவராக இருந்து ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கு, தொண்டர்களுக்கு டீ தந்து உபசரித்து பின்னர் அரசியலில் நுழைகிறார் மோடி.