இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாவலை சினிமாவாக்க கேள்விகளை கேளுங்கள்!

படம்
கிரிஷ் காசர்வல்லி... இரண்டாம் பகுதி... திரைப்படமாக்கும் கதையை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? நாவலை சிறுகதையை படித்து அதனை திரும்ப கூறும் தேவையிருக்கிறதாக என யோசிப்பேன். அவ்வளவேதான். அடுத்ததாக தற்போதைய உலகில் கூறும் கதைக்கு பொருந்திப்போகும் நிகழ்வுகள் உண்டா? இன்றைய உலகில் எனது கதை ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துமா? கதையின் நிகழ்வுகளை உணர்ச்சிகளை சினிமா அனுபவமாக வலுவாக மாற்ற முடியுமா? என்பதை கேள்விகளாக எனக்குள் கேட்டு பதில் கிடைத்தால் கதையை திரைப்படமாக உருவாக்குவேன். உங்களுடைய வாழ்க்கையிலிருந்து பல்வேறு அனுபவங்களை பெற்றிருப்பீர்கள். குறிப்பாக உங்களது தந்தை குறித்து கூறுங்கள்.  எங்களது கிராமத்தில் எனது தந்தை ஜமீன்தாராக வாழ்ந்து வந்தார். ஆனால் அதேசமயம் காந்தியத்தில் நம்பிக்கை கொண்டவரும் கூட. தலித்துகளை முன்னேற்றும் விதமாக கிணறுகள், பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றை கட்டித்தந்தவர் ஊரிலுள்ள அனைத்து நிகழ்வுகளிலும் மரியாதையை தரவேண்டிய அந்தஸ்திலான ஜமீன்தாராக பங்கேற்பார். மதத்தின் மீது பிடிப்பற்ற என் தந்தை அக்காலத்தில் கிராமத்தில் படித்த நபர் அவர் மட்டும்தான். ஏறத்தாழ என் தந்தையின் கு

மருந்து தருவதற்கு எடையும் வயதும் முக்கியமா?

படம்
மருந்துக்கு வயது முக்கியமா ? நிச்சயமாக . அலோபதி மட்டுமல்ல , சித்தா , ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவமுறைகளிலும் நோயாளியின் வயது மட்டுமல்ல எடையும் மிக முக்கியம் . வயதான நோயாளிகளுக்கு அவர்களின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடு திறன் குறைந்திருக்கும் . குழந்தைகள் , இளைஞர்கள் ஆகியோருக்கு செயல்திறன் அதிகம் என்பதால் மருந்துகளின் அளவும் முதியவர்களோடு ஒப்பிடும்போது மாறுபடும் . புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு எதிர் நுண்ணுயிரி மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது பிஎம்ஐ உள்ளிட்ட விவரங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்கிறார் இங்கிலாந்து மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் டொனால்டு சிங்கர் .

வேதிப்பொருட்களை வெப்பம் அழிக்குமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? காய்கறிகளிலுள்ள செயற்கை வேதிப்பொருட்கள் சமைக்கும்போது அழிந்துவிடுமா? இப்படியொரு நம்பிக்கையை நீங்கள் படித்த ஆரம்ப பள்ளி பாடப்புத்தகங்கள் தந்திருக்கலாம். ஆனால் உண்மையில் நூறு டிகிரி செல்சியஸிற்கு மேலாக உணவை வெப்பப்படுத்தினால் மட்டுமே செயற்கை வேதிப்பொருட்கள் அழிய சிறிதளவேனும் சாத்தியம் உண்டு. உரம்போட்ட காய்கறிகளை வாங்கி வேதிப்பொருட்களை நீக்கும் முயற்சியை விடுத்து உரமிடாத பொருட்களை வாங்கி பயன்படுத்துவது ஆயுசுக்கும் உத்தரவாதம் தரும்.

சீனாவில் அதிகரிக்கும் கடன்!

அதிவேக கடன்பூதம்! சீனாவின் விரிவுபடுத்தப்பட்ட அதிவேக ரயில்கள்(HSR) மூலம் அரசுக்கு பெருமளவு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. உலகின் மூன்றில் இருபங்கு அதிவேக ரயில்கள் சீனாவில் ஓடுகின்றன. ஏறத்தாழ சீனாவின் 25 ஆயிரம் கி.மீ தொலைவை ரயில்கள் இணைக்கின்றன. டிசம்பரில் சீனாவில் குவாங்சூ – வூஹன் நகரங்களை இணைக்கும் 1,100 கி.மீ அதிவேக ரயில் பாதை செயல்படத்தொடங்கியது. உள்நாட்டு உற்பத்தியையும் தாண்டி சீனாவின் கடன் 2016 ஆம் ஆண்டு 141 ட்ரில்லியனை தொட்டது. சீன ரயில்வே கார்ப்பரேஷனின் தற்போதைய கடன் அளவு 5 ட்ரில்லியன். அனைத்தும் அதிவேக ரயில்களின் கட்டுமானதிட்டத்தினால் உருவானது. பாக்ஸ் அதிவேக கடன்! 1.சாங்சுன்-ஹன்சுன் கி.மீ- 471(கி.மீக்கு 12 மில்லியன்) செலவு: 37பில்லியன் கடன் அடைவு: 2030 2.நானிங்-குவாங்சூ கி.மீ- 570(கி.மீக்கு 14 மில்லியன்) செலவு: 42பில்லியன் கடன் அடைவு: 2030 3.ஷிஜியாஹூவாங்- ஸெங்சூ கி.மீ: 420 கி.மீ(கி.மீக்கு 14 மில்லியன்) செலவு: 44 பில்லியன் கடன் அடைவு: 2025

பூனை புரளிகள்!

படம்
மியாவ்! மியாவ்! பூனைகளுக்கு சிறந்த உணவு பால்! இது நம் கற்பனை. பாலூட்டிகளுக்கு வளர்ந்தபிறகு பால் என்பது செரிமானத்திற்கு சிக்கலான ஒன்று. குட்டியாக இருக்கும்போத பாலின் கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றுக்காக பாலை பூனைகள் டிக் அடிக்கின்றன. வளர்ந்த பூனைக்கு பால் செரிமானச்சிக்கலை ஏற்படுத்தும். பூனைகளுக்கு பயிற்சியளிக்க முடியாது. நாய்களைப் போலவே பூனைகளுக்கும் பயிற்சிகளை கொடுத்து பழக்க முடியும். ஆனால் நாய்களை விட பூனைகளிடம் சற்று பொறுமையாக நடப்பது அவசியம். மீனையும், கோழியையும் பரிசாக கொடுத்து போர் அடிக்காதபடி பூனையை பழக்கப்படுத்தலாம். மனிதர்களின் மனதை பூனைகள் அறியும்! நாய், பூனை இரண்டுமே சில வகை உடல்மொழிகள் மூலம் தம் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இவற்றில் நாய், மனிதர்களின் கவனத்தை ஈர்ப்பதில் டாப்பில் உள்ளது. மனிதர்களின் உணர்வை, கருத்துக்களை புரிந்துகொள்வதில் பூனைகள், நாய்கள் சமர்த்து என்பதை அவை நம் முகத்தை பார்க்கின்றன என்பதை வைத்து உறுதியாக கூறமுடியாது.

அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு - அனிகெட் சுலே

படம்
 நேர்காணல் “இந்தியச்சூழலில் அறிவியல் ஆராய்ச்சிகளை காப்பாற்றுவதே பெரிய சவால்தான்” அனிகெட் சுலே, ஆராய்ச்சியாளர், ஹோமிபாபா ஆராய்ச்சி மையம்(HBCSE) 2002 ஆம் ஆண்டு மும்பை ஐஐடியில் முதுகலை இயற்பியல் படித்த சுலே, ஜெர்மனியின் பாட்ஸ்டம் பல்கலையில் வானியற்பியலில் முனைவர் பட்டம் வென்றவர், 2007 ஆம் ஆண்டிலிருந்து   ஹோமி பாபா ஆராய்ச்சி கல்விமையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். மனிதவளத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் சத்யபால் சிங்கிற்கு எதிராக எப்படி கடிதம் எழுதினீர்கள்? அமைச்சர் கூறிய டார்வினிய அறிவியல் கொள்கை நவீன அறிவியலையே அசைத்து பார்ப்பது என்பதால்தான் கடிதம் எழுதும் முயற்சியை செய்தோம். அதிகாரத்திலுள்ளவர்கள் தாறுமாறாக அறிவியலை தத்துவமாக புரிந்துகொண்டு பேசுவது பின்னாளைய தலைமுறையை பாதிக்கும். வேதியியலில் பென்ஸேன் அமைப்பு அல்லது இயற்பியலில் நியூட்டனின் விதிகளை எப்படி திடுதிப்பென தவறு என கூறுவீர்கள்? அறிவியல் ஆராய்ச்சிகளை காப்பாற்றுவதே இந்திய அரசியல் சூழலில் கடினமாக உள்ளது. அறிவியலுக்கு எதிரான மனநிலையாக இதனை கருதலாமா? வரலாறு நெடுக அறிவி

"கலைப்படங்களை எடுப்பதற்கான இடம் சுருங்கிவிட்டது" - கிரிஷ் காசர்வல்லி

படம்
கிரிஷ் காசர்வல்லி....  கன்னடத்தில் இலக்கியங்களை தழுவிய பனிரெண்டு  படங்களை இயக்கி பதினான்கு தேசிய விருதுகளை வென்ற முக்கியமான இயக்குநர். மருந்தியல் படித்துவிட்டு திரைப்படக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்து ஆச்சரியம் தந்தவர். யூ.ஆர். அனந்தமூர்த்தி, பூர்ணசந்திர தேஜஸ்வி, எஸ்.எல். பைரப்பா ஆகியோரின் நாவல்களை சிறுகதைகளை வலுவான திரைப்படங்களாக்கினார் காசர்வல்லி. பதினான்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறீர்கள். கலைப்படங்களை எடுப்பதற்கு எளிய சூழல் என்று இதனைக் கூறலாமா? கர்நாடகாவில் கலைப்படங்களை எடுப்பது சரியான வழியல்ல. முதலில் இங்கு தயாரிப்பு செலவு என்பது குறைவாக இருக்கும். ஆனால் இன்று நிலைமை  அப்படியல்ல. அரசு படம் உருவாக்க உதவுகிறது என்றாலும் தயாரிப்புசெலவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. திரைப்பட தயாரிப்பாளர் தன் முதலீட்டை எப்படி எடுப்பார் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை உருவாக்கினேன். சினிமா சூழல்கள் படங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கையை தரவில்லை என்பதால் பலர் வற்புறுத்தியும் நான் அடுத்த படத்தை எடுக்கவில்லை. மலையாளம் , மராத்தி வட்டாரங்களில் வலுவா

அக்கறை கொள்ளாதவர்களின் வாழ்க்கை!

படம்
ஒருபடம் ஒரு ஆளுமை - லிஜி இறுதி அத்தியாயம்! விமானத்தை விட   வேகமாக பறந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தில் திசைகளின்றி, மொழிகளின்றி, நம்பிக்கையின்றி, உணர்வுகளின் வழியாக மென்மையாக... மிகவும் மெதுவாக நம்முடன் சிலரும் பயணிக்கின்றனர். அவர்களின் இருளும், மௌனங்களும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் வெளிச்சமாக இருக்க வேண்டியவர்கள் அவர்களைச் சுற்றியிருக்கும் நாம் தான். ஆனால், நம் பயணமே சரியான இலக்கின்றி பல நெருக்கடிகளுக்குள் சுழன்று கொண்டிருக்கும்போது எதிரே வருபவரையே நம்மால் கண்டுகொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஆனால், ஒரு கலைஞன் அதைக் கண்டுகொள்கிறான். நாம் கண்டுகொள்ளாத, தவறவிட்ட, அக்கறை காட்டாத ,இழந்து விட்ட வாழ்க்கையை தன் கலையினூடாக நமக்கு ஞாபகபடுத்துகிறான். நாம் கண்டுகொள்ளாமல், அக்கறை காட்டாமல் விட்டவர்களின் வாழ்க்கையைப் போல நமக்கும் கிடைத்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்த வெளிச்சத்தின் முன்னால் நம்மையெல்லாம் குற்றவாளியாக நிறுத்த வைக்கிறான் ஒரு சிறந்த கலைஞன். இந்த மாதிரி நாம் கண்டுகொள்ளாமல் விட பட்ட பலரில்

அடிமை முறையின் வேர்!

படம்
ஏழு தலைமுறைகள்(சுருக்கம்) அலெக்ஸ் ஹேலி தமிழில்: எத்திராஜூலு சிந்தன் புக்ஸ் ரூ.150 (நான்காவது சென்னை புத்தகத்திருவிழா, ராயப்பேட்டை YMCA) ஏழுதலைமுறைகள் எனும் அலெக்ஸ் ஹேலி எழுதிய மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 900 பக்கங்கள் தாண்டும். அதைத்தான் படிக்கவேண்டும் என எழுத்தாளர் என்.ஸ்ரீராம் கூறினார். ஆனால் வாங்கிய நூலை அதற்காக தள்ளி வைக்கவா முடியும்? ஆப்பிரிக்க கிராமத்தில் தொடங்கி அமெரிக்கா வரை செல்லும் அடிமைகளின் வேதனைகளை ஏழு தலைமுறைகளாக விவரிக்கும் நூல். எழுத்தாளர் அலெக்ஸ் ஹோலி பனிரெண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எழுதிய நூல் இது. ஒருவகையில் இது அவரின் பாரம்பரிய வரலாற்றை தேடும் முயற்சியும் கூடத்தான். ஆப்பிரிக்க கிராமத்தில் உமரோ பிண்ட்டே தம்பதியின் மகனாக பிறக்கும் குண்ட்டா கிண்ட்டேயின் குடும்ப வரலாறுதான ்கதை. குண்ட்டா கிண்ட்டேதான் அவர்களுடைய மாண்டிங்கா இனத்தின் தந்தை. அவரின் இரண்டாம் மனைவி ஆயேஷா மகன்தான் உமரோ.  குண்ட்டா கிராமத்து வாழ்வில் இயற்கையுடன் வாழும்போது ஏற்படும் வளம் வறுமை துன்பம், சந்தோஷம், கொண்டாட்டம், விழாக்கள் என அனைத்தையும் வாசகர்களுடன் பகிர்கிறார். வேட்டையாடும் ப

ஐபோனை உடைக்கும் தேசபக்தி!

படம்
பிட்ஸ்! பப்பி ஐஸ்க்ரீம்! தைவானின் காவோஷியங் நகரிலுள்ள ஜே.சி.கோ ஆர்ட் கிச்சன் கஃபேவில்,   நாய்க்குட்டிகளைப் போன்ற அச்சு அசல் வடிவில் ஐஸ்க்ரீம்களை டிசைன் செய்து வாடிக்கையாளர்களை திகைக்க வைத்துள்ளனர். பல்வேறு ப்ளேவர்களில் லேப்ரடார், பக் வகை நாய்களின் உருவத்தில் செய்து தரும் ஐஸ்க்ரீம்களை சாப்பிடுவதா, ரசிப்பதா என வாடிக்கையாளர்கள் மலைத்துபோயுள்ளனர்.  சதுரங்க ஆசை! அமெரிக்காவின் மிசௌரியைச் சேர்ந்த உலக செஸ் செஸ் சங்கத்தினர், 20 அடி உயரத்தில் ராஜா செஸ் காயை ஆப்பிரிக்க மரத்தில்(sapele mahogany) உருவாக்கி கின்னஸ் செய்துள்ளனர். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டில் 14 அடியில் செஸ் காய்களை செயின்ட் லூயிஸ் அமைப்பினர் உருவாக்கியிருந்தனர். “செஸ் அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்திய விளையாட்டு என்பதை இப்படைப்பு வலியுறுத்தும்” என்கிறார் சங்க ஒருங்கிணைப்பாளரான பிரையன் ஃப்ளவர்ஸ். கண்ணுக்குள் லென்ஸ்! இங்கிலாந்தைச்சேர்ந்த பெண்மணி அங்குள்ள மருத்துவமனையில் கண்களில் வலி என அட்மிட் ஆனார். இடதுகண்ணின் இரப்பையில் வலி என்றவரை ஸ்கேன் செய்தபோது லென்ஸ் உள்ளே இருப்பது உறுதியாக, அறுவை சிகி

முதலைக்கடி வாங்கிய பயிற்சியாளர்!

படம்
பிட்ஸ் ! சிக்னலில் வேலைவாய்ப்பு ! அமெரிக்காவில் சிலிக்கன் வேலிக்காரரான டேவிட் கஸாரெஸ் " வீடற்றவன் ; பசியோடு இருக்கிறேன் . என்னுடைய ரெஸ்யூமை கொஞ்சம் பாருங்கள் " என போர்டுடன் ட்ராஃபிக் சிக்னலில் வேலை தேடி நின்றார் . உடனே அவரது கோரிக்கை ட்விட்டரில் வைரலாக , தற்போது கூகுள் , நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளன . வேலை உங்கள் சாய்ஸ் ! ஜஸ்ட் முதலைக்கடி ! தாய்லாந்தின் சியாங்ராயிலுள்ள புகழ்பெற்ற வனவிலங்கு பூங்காவான போக்கதாராவில் முதலை சாகசங்கள் வெகு பிரபலம் . அன்றும் அப்படித்தான் பயிற்சியாளர் குன் புசாவிட் முதலையின் வாயில் கைவைத்து சாகசம் செய்தார் . அப்போது திடீரென முதலை வாயை லாக் செய்ய புசாவிட்டின் கை உள்ளே மாட்டிக்கொண்டது . ஆயிரக்கணக்கான ஆடியன்ஸ் சூழ்ந்திருக்க நடந்த பெரும்போராட்டத்தில் புசாவிட்டின் கையோடு அவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் . கோபம் வர்ற மாதிரி வீரச்செயல் எதற்கு ? தமிழ்பேசும் சீனக்கண்மணி ! சீனப்பெருஞ்சுவரை சீனப்பெண் தமிழில் அறிமுகம் செய்து பேசும் வீடியோதான் இன்று இணையத்தில் வைர

வெளிப்புற வெப்பத்தை குறைக்கும் கிராபீன் டிரெஸ்!

படம்
கிராபீன் உடை ! ஒரே ஒரு அணுவைக் கொண்ட கிராஃபீனைப் பயன்படுத்தி வோல்பேக் நிறுவனம் உடை தயாரித்து அசத்தியுள்ளது . 2004 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களால் கார்பனை நீக்கி கண்டறியப்பட்ட நெகிழ்வான , மின் கடத்தும் தன்மை கொண்ட பொருள் . உடலிலுள்ள வெப்பத்தை குளிர்ந்த பாகங்களுக்கும் கடத்தும் தன்மை கொண்ட கிராபீன் , உடையாக அணிவது புதுமையான அனுபவத்தை தரக்கூடும் . வியர்வையை எளிதில் ஆவியாக்கும் இந்த உடையில் வாட்டர்ப்ரூஃப் உண்டு . " எங்களது ஆராய்ச்சிக்குழு செய்த ஆராய்ச்சியில் கிராபீனை பயன்படுத்தி உடையை தயாரித்துள்ளோம் . நடைமுறையில் இதனை பயன்படுத்துவது அதிகரிக்கும் வாய்ப்புண்டு " என்கிறார் துணை நிறுவனரான நிக் டிட்பால் . 695 டாலர்கள் விலைகொண்ட இந்த உடையை காலை ஜாக்கிங்குக்கு கூட அணிந்து சென்று புதிய கண்டுபிடிப்பின் சுகத்தை உணரலாம் .

வெடிகுண்டுகளை வைஃபை மூலம் கண்டுபிடிக்கலாம்!

படம்
வைஃபை பாதுகாப்பு ! பொது இடங்களில் நடைபெறும் குண்டுவெடிப்புகளை தடுக்கும் கேமரா , ஸ்கேனர் தொழில்நுட்பத்திற்கும் , அதன் பராமரிப்பு ஆட்களுக்கும் அதிக செலவு பிடிக்கிறது . வைஃபை மூலம் ஒருவரின் பைகளிலுள்ள திட , திரவ பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்பதே பிங்காம்டன் , இந்தியானாபோலிஸ் , நியூ ப்ரூன்ஸ்விக் , ம ரட்ஜெர்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு .  திரவப்பொருட்களின் ( நீர் , அமிலம் , மது ) அளவைக் கூட வைஃபை மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கலாம் என்பதே இம்முறையின் சாதனை . மூன்று வைஃபை ஆன்டெனாக்களை கொண்டுள்ள இக்கருவி , பதினைந்து வகையான பொருட்களை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது . வெடிகுண்டுப்பொருட்களை கண்டறிவதில் 99 சதவிகிதமும் , உலோகப்பொருட்களை கண்டறிவதில் 98 சதவிகிதமும் , திரவப்பொருட்களை கண்டறிவதில் 95 சதவிகிதம் துல்லியமாக இக்கருவி செயல்படுகிறது . " இம்முறையில் அதிக ஆட்கள் உதவியின்றி பாதுகாப்பை உறுதியாக அமைக்கலாம் " என்கிறார் ஆராய்ச்சி குழு துணைத்தலைவரான யின்கியிங் சென் .

காவல்துறை பலியாகும் அவலம்!

படம்
பலியாகும் காவல்துறையினர் ! கடந்த ஜனவரியிலிருந்து இன்றுவரை பிரேசிலில் காவல்துறையினர் கொல்லப்படுவது 39 சதவிகிதம் அதிகரித்துள்ளது . ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் 895 பேர்   தாக்கப்பட்டு இறந்துள்ளனர் . குற்றங்களை தடுக்க போலீஸ் செல்லும் ரெய்டுகள் தொடர்ச்சியாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன . ஆறுமாதங்களுக்கு முன்பாக பிரேஸில் அதிபர் ரியோ டி ஜெனிரியோ நகரை பாதுகாப்பு காரணம் சொல்லி ராணுவத்திடம் ஒப்படைத்தார் . ராணுவத்தினரின் மூர்க்கமான வன்முறை நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை குலைத்துவிட்டதே நிஜம் .  தற்காப்பை காரணம் சொல்லி ராணுவம் பல்வேறு ரெய்டுகளிலும் மக்களை கொன்றுகுவித்து வருகிறது . 2015 ஆம் ஆண்டில் 645 மக்கள் உட்பட கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரம் மக்கள் போலீசாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . இதற்கு போலீஸ் சொல்லும் காரணம் , ஆயுதக்குழுக்களை ஒழிக்கும் முயற்சியில் தற்காப்புக்காக தாக்கினோம் என்ற மாறாத பதில்தான் . ஆனால் ஆயுதம் இல்லாத மக்களும் இதில் கொல்லப்படுவது முக்கிய பிரச்னை என மனித உரிமை கண்காணிப்பகம் இப்பிரச்னையை ஆவணப்படுத்தி உலகளவிலான கவன ஈர்ப்பை ஏற்படுத்த

எல்ஜியின் 5 ஜி வெரைட்டி!

படம்
5 ஜி போன் பராக் ! அடுத்தாண்டின் மத்தியில் 5 ஜி போன்களை உங்கள் விரல்கள் தேய்த்து விளையாடிக்கொண்டிருக்கும் . ஸ்பிரிண்ட் நிறுவனம் எல்ஜியுடன் இணைந்து 5 ஜி போன்களை விரைவில் தயாரிக்கவிருக்கிறது . " புதுமைத்திறன் கொண்ட எல்ஜி எலக்ட்ரானிக்ஸூடன் இணைந்து 5 ஜி போன்களை எங்களது நிறுவனம் தயாரித்து வழங்கும் அனுபவம் எங்களுக்கு ஆர்வமூட்டி வருகிறது " என்கிறார் ஸ்பிரின்ட் நிறுவன இயக்குநர் ஜான் ஷா . ஒவ்வொரு தலைமுறை போன்களும் முந்தைய தலைமுறை பொருட்களை விட ஆயிரம் மடங்கு வேகமாக இருக்கும் . 5 ஜி இணைப்பில் 8 ஜிபி ஹெச்டி படத்தையும் ஆறே செகண்டில் தரவிறக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . தட் இஸ் 5 ஜி .   5 ஜி போன்களை வாங்கிவிட்டீர்கள் . ஆனால் 5 ஜி கனெக்‌ஷன் கிடைக்காதபோது என்ன செய்வீர்கள் ? ஸ்பிரின்ட் , வெரிஸோன் , டிமொபைல் , ஏடி அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் 5 ஜி இணைப்பு தர ரெடியாக உள்ளன . உடனே இவ்விஷயங்கள் அமுலுக்கு வராது என்றாலும் 5 ஜிக்கான ஆராய்ச்சியும் அதற்கான பொருட்களும் தயாரிப்பதில் டெக் நிறுவனங்கள் ஓவர்டைம் உழைப்பை கொடுத்து வருகின்றன .