நம்பிக்கையூட்டும் நெசவாளர் கிராமம்




Image result for bhujodi village



ஜவுளி கிராமம்!

குஜராத்தைச் சேர்ந்த புஜோடி கிராமம்(கட்ச் மாவட்டம்) ஜவுளிகளுக்கு புகழ்பெற்றது. இங்குள்ள 250 குடும்பங்களும் நெசவாளர்கள்தான். வால்ஜி என்பவரே இங்குள்ள நெசவுத்தொழிலில் முன்னணி வகிக்கிறார். ஏறத்தாழ 150 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார் இவர்.

1974 ஆம் ஆண்டு சிறந்த நெசவாளர் விருதை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கரங்களில் பெற்றவர் வால்ஜி. தற்போது வால்ஜியின் மகன்கள் ஐவரும் தொழிலை தளராமல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர். நெசவில் உருவாகும் துணிகளும் பரபரவென விற்பதோடு இவரது நெசவுத்தொழிற்சாலையை பார்க்கவென ஆண்டுதோறும் நவம்பர் - பிப்ரவரி வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து வியக்க வைக்கின்றனர். சால்வைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள் அனைத்தையும் இயற்கையான நிறங்களைக் கொண்டே தயாரிக்கின்றனர். 2001 ஆம் ஆண்டு இயற்கை பேரழிவிலிருந்து மீண்ட புஜோடி கிராமம், பல்வேறு கண்காட்சிகளில் பங்கேற்று தொழிலாளர்கள் மாதத்திற்கு 15 ஆயிரம் -20 ஆயிரம் சம்பாதிக்கின்றனர்.

பிரபலமான இடுகைகள்