நல்லவர் யார்? கெட்டவர் யார்?- ஆல்ட் நியூஸ் ஆய்வு
முத்தாரம் Mini
உங்களுடைய இணையதளத்தில் குஜராத் உண்மைகள் என்ற தலைப்பில்
ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியிருந்தீர்கள். இதனை உருவாக்கியதற்கான தூண்டுதல்களை கூறுங்கள்.
2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் அரசு வளர்ச்சி குறித்து
தவறான செய்திகள் ஊடகங்களில் சரியா, தவறா என அறியமுடியாதபடி பரப்பப்பட்டன. சிங்கப்பூர் படத்தை குஜராத் என பலரும் வளர்ச்சி பெயரில் பகிர்ந்தனர். 2016 செப்டம்பரில் போலித்தகவல்களை கண்டறிய வலைதளத்தை தொடங்கினோம்.
போலிச்செய்திகளை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?
ஒரு செய்தியை சரியா, தவறா என புரிந்துகொள்ள முடியாமல் போவது முதல்வகை. இரண்டாவது, உண்மை பாதி, பொய் பாதி என இணைந்துள்ளது என தெரிந்தே பரப்பப்படுவது. பர்தா அணியாததால் கொளுத்தப்பட்ட ஹைதராபாத் பெண் என்ற கேப்ஷனோடு காட்டப்படும் புகைப்படம்
உண்மை. ஆனால் கேப்ஷன் பொய்.
போலிச்செய்திகளை பரப்பும் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது
சரியான தீர்வா?
நிச்சயம் இல்லை. தவறு என்றால் அரசு உடனடியாக சட்டத்தை பயன்படுத்தி நிறுவனங்களை மூடுகிறது. செய்தி பகிர்வு செயலிகள் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து
வருகின்றன. போலிச்செய்திகள், வதந்திகள் மக்களை உடனே படிக்கத்தூண்டுவது தேடுபொறி நிறுவனங்களுக்கு பெரும் லாபத்தை
அள்ளித்தருகிறது. பெரும்பாலான போலிச்செய்தி தளங்களில்
கூகுள் விளம்பரங்கள் இடம்பெறுவது தற்செயலான ஒன்றல்ல.
-பிரதிக் சின்கா, ஆல்ட்நியூஸ் இணையதளம்.