Overtime உழைப்பாளிகள்!




Image result for south korea








உறுதியான உழைப்பாளிகள்!

தென்கொரியாவின் சியோலில் அலுவலக பணியாளர்கள், ஆண்டுக்கு 240 மணிநேரங்கள் உழைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது அமெரிக்கர்களின் வேலைநேரத்தைவிட அதிகம். அதிக வேலைநேரம் தொடர்பான பிரச்னைகளால் ஜப்பானியர்கள் உயிரிழப்பதைப் போலவே தென்கொரியாவிலும் ஆண்டுக்கு 500 பேர் உயிரிழந்துள்ளனர். அரசின் தொழிலாளர்துறை அமைச்சகம், இதனை மாற்ற வார இறுதி விடுமுறைகளோடு வார நாட்களிலும் 52 மணிநேரம் மட்டுவே பணிநேரம் என வரையறுக்க உள்ளது.

சாம்சங், ஹூண்டாய் உள்ளிட்ட உலகப்புகழ்பெற்ற பிராண்டுகளை உருவாக்கிய நாட்டில் அதிக நேரம் பணிசெய்வது என்பது பெருமைக்குரிய அடையாளம். தொலைக்காட்சி தயாரிப்பாளரான லீயின் தற்கொலை அரசை வேலைமுறை குறித்து வெகுவாக யோசிக்கவைத்துள்ளது. "52 மணி வேலைநேர மாற்றம் மூலம் 5 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. 

இளைஞர்களின் சமுதாயம் வேலையில் மூழ்கி உயிரிழப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. பொருளாதார வளர்ச்சிக்காக உழைத்தது முன்னர் தேவையாக இருந்தது. இனி அந்த நிர்ப்பந்தம் அவசியமிலை" என்கிறார் அதிபர் மூன் ஜே இன். 3,672 பெரும் நிறுவனங்களில் 700 க்கும் மேற்பட்டவரை புதிய விதிகளை பின்பற்ற தொடங்கிவிட்டன. வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் விளக்குகளும், கணினிகளும் அணைக்கப்படுவது கட்டாயமாகியுள்ளது.

பிரபலமான இடுகைகள்