தீராத விளையாட்டு தாத்தா!
பிட்ஸ்!
96 வயது மாணவி!
4 ஆம் வகுப்பு பாஸ் ஆவது பெரிய விஷயமா? கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி
தன் 96 வயதில் அதை சாதித்ததுதான் அசகாய சாதனை. கேரள அரசின் அக்ஷரலக்ஷம் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி வென்ற பாட்டியை மஹிந்திரா
குழுமத்தலைவர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் இந்த வயதில் கல்வி மீது
ஆர்வமா? என பாராட்டி புகழாரம் சூட்டியுள்ளனர்.
பீட்ஸா மியூசியம்!
அமெரிக்காவின் சிகாகோவில் பீட்ஸாவுக்கென அருங்காட்சியகம்
திறக்கப்பட்டுள்ளது. டிசம்பர் வரை செயல்படும் இந்த மியூசியத்தில் பீட்ஸா வரலாறு, முக்கியமான மெனுக்கள், கண்டுபிடிப்புகள் என அணிவகுத்துள்ளன. "அமெரிக்கர்களின் விருப்ப உணவான பீட்ஸா குறித்து ஆல் இன் ஆல் அறிவது பலருக்கும்
ஆர்வமாக இருக்கும்" என்கிறார் மியூசியத்தலைவர் கென்டல் ப்ரூன்ஸ்.
வெள்ளத்தில் சூப்பர்ஹீரோ!
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு இந்தியா முழுவதும் கவனம்
ஈர்த்த நிகழ்வு. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிலுள்ள செருத்தோனி பாலத்தில்
அப்பாலம் முழுகும் சில நிமிடங்களுக்கு முன்பு குழந்தையோடு வாலிபர் தப்பித்து ஓடி உயிர்பிழைக்கும்
வீடியோ இணையத்தில் திகுதிகு வைரலாகி வருகிறது. வெள்ள அபாயத்தால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துவிடப்பட்டுள்ளது. 187 பேர் பலியான வெள்ள பாதிப்பில், வீடிழந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தீராத விளையாட்டு தாத்தா!
தைவானைச் சேர்ந்த சென் சான் யுவான், தன் சைக்கிளில் பதினொரு போன்களை பொருத்தி போகிமன் கோ விளையாட்டை விளையாடி நாடெங்கும்
பிரபலமாகியுள்ளார். மாதம் 1300 டாலர்கள் செலவழித்து விளையாடும் சென்
தாத்தா, அதிகாலை 4 மணிக்கு எழுந்து விளையாடி வருகிறார். "என் பேரன் மூலம் கேம் பிடித்துப்போனது" என்கிறார் சென்.