மாற்றத்தின் முகவர்கள்!
மாற்றத்தின் முகவர்கள்!
அமெரிக்காவின் தெற்குப்பகுதியைச் சேர்ந்த இம்மனிதர்கள் அப்பகுதிகளில் தம் செயல்பாட்டின் வழியாக மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
South Fulton Eight
அட்லாண்டாவிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள சவுத் ஃபுல்டன் நகரிலுள்ள கோர்ட்டில் பணிபுரியும் நீதிமன்ற அதிகாரி லகேஷியா
கோஃபீல்டு முதற்கொண்டு நீதிபதி டிஃபானி கார்டர்செல்லர்ஸ் வரையிலான எட்டுப்பேர்களும்
கருப்பின பெண்கள்தான். இந்நகரில் கருப்பினத்தவர்களின் எண்ணிக்கை
90% இருந்தாலும் மாவட்ட நீதிபதிகளான பெண்களின் எண்ணிக்கை 8% தான்.
Nicole Hurd
வடக்கு கரோலினாவைச்
சேர்ந்த நிக்கோல் ஹர்ட்,
வர்ஜீனியா பல்கலைக்கழக டீன். 2005 ஆம் ஆண்டிலிருந்து 3 லட்சம் மாணவர்களை கல்லூரியில் இணைக்க முயற்சித்து வென்றார்.2025 ஆம் ஆண்டில் 1 கோடி மாணவர்களை கல்லூரியில் இணைப்பதே நிக்கோலின் லட்சியம்.
14 மாநிலங்களிலுள்ள 646 பள்ளிகளில் தன் லட்சியத்தை
நிறைவேற்றுவதற்கான தன்னார்வலர்களை உருவாக்கி வருகிறார்.