அரசர்களின் கலாட்டா கெட்டிமேளங்கள்!
கலாட்டா கல்யாணங்கள்!
1966 ஆம் ஆண்டு நெதர்லாந்து
ராணி பீட்ரிக்ஸ், ஜெர்மனைச் சேர்ந்த கிளாஸ் வான் அம்ஸ்பெர்க் என்பவரை மணமுடித்தார்.
ஆனால் அம்ஸ்பெர்க் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் இளைஞர் அமைப்பில் இருந்தவர் என மக்களுக்கு
தெரிய வர போராட்டங்கள் வெடித்தன.
1936 ஆம் ஆண்டு எட்டாம்
எட்வர்ட் அரசர் பதவியை ஏற்றார். வாலிஸ் சிம்சன் என்ற அமெரிக்க விதவைப் பெண்ணை திருமணம்
செய்ததால் அரச பதவியை துறந்துவிட்டார். பின்னர் எட்வர்ட் இறக்கும்வரை தன் காதல் மனைவி
சிம்சனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
நார்வே இளவரசர் ஹாக்கோன்
மேக்னஸ் 2000 ஆம் ஆண்டில் நாட்டையே தனது திருமண அறிவிப்பு மூலம் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இசை விழாவில் சந்தித்த மெட்டி மெரிட் ஜெசம் ஹொய்பி என்ற சாதாரண பெண்ணை திருமணம் செய்தார்.
ஹொய்பிக்கு முதல் திருமணத்தின் மூலம் குழந்தைகள் உண்டு.