அடிமைகள் இன்றும் உள்ளனரா?
கொரியாவில்
அடிமைகள்!
வடகொரியாவில் பத்தில் ஒருவர் மிக மோசமான நிலையில்
பணிபுரிவதாக The Global Slavery Index அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியா மட்டுமல்ல பல்வேறு உலகநாடுகளும்
இப்பிரச்னையில் சிக்கியுள்ளன. அடிமைகளால் உற்பத்தி
செய்யப்படும் 350 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை
உலக நாடுகள் பயன்படுத்தி வருகினறன. உலகிலுள்ள 40.3 மில்லியன் மக்கள்(2016) அடிமையாக உழைக்கும்
அவலத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என இவ்வறிக்கை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
"இந்த அறிக்கை உண்மையை வெளியே
கொண்டுவந்துள்ளது. புள்ளிவிவரங்கள் எண்களாக இருந்தாலும் அது
என்னைப்போன்று சிரமப்பட்ட முகமறியாத பலரின் அவல வாழ்க்கை" என்கிறார் இயான் மி பார்க். திருமணத்திற்காக
கொரியாவுக்கு கடத்தப்பட்டவர் சீனாவுக்கு தப்பி வந்து நியூயார்க்கில் தற்போது
வாழ்ந்து வருகிறார். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரிய ஆட்களை
சீனர்கள் சில நூறு டாலர்களுக்கு அடிமைகளாக விற்கிறார்கள் என தகவல் கூறுகிறார்
இயான். எரிட்ரியா, தெற்கு சூடான்,
பாகிஸ்தான், கம்போடியா, இரான்
ஆகியவை அடிமை தேசங்களாகவும் , கோகோ, பருத்தி,
நிலக்கரி ஆகிய தொழில்களில் அடிமைகள் உள்ளனர் என அறிக்கை
சுட்டிக்காட்டியுள்ளது.