புகைப்படக்காரரை கைது செய்த வங்கதேச அரசு!





Image result for shahidul alam



அராஜக கைது!

வங்கதேசத்தின் பிரபல புகைப்படக்கலைஞர் ஷகிதுல் ஆலம், அரசுக்கு எதிராக அல்ஜஸீரா டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அறுபத்து மூன்று வயதான புகைப்படக்காரர் ஷகிதுல் ஆலம், பேட்டி வெளியான மறுநாள் காலை பத்துமணிக்கு டாகாவிலுள்ள வீட்டில் 20 போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஊடகத்தில் அரசின் மீதான ஊழல் கறையை ஏற்படுத்துவதாக வங்கதேச ஐ.டி சட்டப்பிரிவு 57படி கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. சர்ச்வாரண்ட் இல்லாத மஃப்டி போலீசார் பத்திரிகையாளர்கள், மனித உரிமையாளர்கள் என பலரையும் மேற்சொன்ன சட்டப்பிரிவில் கைது செய்து சிறையிலடைத்து வருகிறது வங்கதேச அரசு. கைது செய்யப்பட்டு 12 மணிநேரத்திற்கு பிறகு ஆலம் கைதான செய்தி ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட் வளாகத்தில் 'போலீஸ் தன்னை லாக்கப்பில் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்தது' என ஊடகங்களிடம் ஆலம் கூறியது அவரது ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது. போக்குவரத்து விதிகளை சீர்த்திருத்தக்கோரி வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் அங்குள்ள ஊழல் செறிந்த சூழலை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.