ஸ்விஸ்வங்கி பணம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி- கட்கரி







முத்தாரம் Mini

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை நாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளதே?

ஜிஎஸ்டி மூலம் மோசடிகள் குறைக்கப்பட்டு அரசுக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது. கருப்புபணம் மெல்ல குறையத்தொடங்கியுள்ளதோடு  வெளிநாடுகளுக்கும் பணம் செல்வதில்லை. வரிவருவாய் மக்களின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும்.

ஆனால் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பண இருப்பு அதிகரித்துள்ளது

சட்டப்பூர்வமான முறையில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் அது.

சாலை பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டுகிறீர்களே?

சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துகளில் 1.5 லட்சம்பேர் இறந்துள்ளனர். இவர்களைக் காப்பாற்ற கொண்டுவந்த வாகனச்சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. போலி லைசென்ஸ்களின் அளவை 30 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைத்துள்ளேன்.

உங்களுடைய பணி திருப்தியளிக்கிறதா?

இல்லை. வருமானத்தை 25 லட்சம் கோடியாக வருமானத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறேன். பாரத்மாலா (7.5 லட்சம்கோடி), சாகர்மாலா(16 லட்சம்கோடி) திட்டங்கள் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்போடு நாடும் வளர்ச்சியடையும்.  
 -நிதின் கட்கரி, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர்.