கலப்படநீரை குடிப்பது ஈஸி!


கலப்பட நீர் இனி குடிநீர்!

 

பீகாரிலும் மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலுள்ள தீவிர குடிநீர் மாசுபாடு பிரச்னை உண்டு. பீகாரிலுள்ள சுலப் எனும் நிறுவனம் 'சுலப் ஜல்' திட்டத்தின் அடிப்படையில் கலப்படநீரை குடிநீராக்க இவ்வமைப்பு முயற்சித்து வருகிறது. இலவசமல்ல; ஒரு லிட்டர் குடிநீர் ரூ.50 பைசாதான்.  

 

தினசரி ஏரி அல்லது குளங்களிலிருந்து பெறப்படும் மாசுபட்ட நீரை சுத்திகரித்து மிக குறைந்த விலையில் விற்பதே சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிண்டேஸ்வர் பதக்கின் உயரிய நோக்கம். தினசரி 8 ஆயிரம் லிட்டர் நீர் என்பது தற்போதைய இலக்கு. 20 லட்சரூபாயில் இதற்கான தொழிற்சாலை அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. டிசம்பரில் தொடங்கும் இம்முயற்சி வரவேற்பு பெற்றால் உலகில் குடிநீரை மிக குறைவான விலையில் தரமான முறையில் அளிக்கும் மாநிலமாக பீகார் உயர சான்ஸ் உண்டு.