பழங்குடிகளை பழிவாங்கும் ஆஸ்திரேலியா!
நேர்காணல்!
" எம் பழங்குடி மக்களை கொன்றது இனவெறிதான்"
உளவியல்
பேராசிரியர் பாட் டட்ஜியன்.
ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி இன
இளைஞர்கள் பெரும்ளவில் தற்கொலையில் ஈடுபட்டு உயிரிழந்து வருகின்றனர். கிம்பெர்லெய் பகுதியில் நிகழ்ந்த தற்கொலை சம்பவங்களின் விகிதம் தேசிய சராசரியை தாண்டிவிட்டது. பர்டி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாட் டட்ஜியன் இது குறித்து உரையாடுகிறார்.
ஆஸ்திரேலியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் உளவியல் பட்டதாரி நீங்கள். எப்படி இப்பாதையை தேர்ந்தெடுத்தீர்கள்.
சமூகரீதியாகவும், வரலாற்றுரீதியாகவும் எங்கள் பழங்குடி இனம் பட்ட துயரங்களையும் வேதனைகளையும் பார்த்து வளர்ந்தவன் நான். எனவே அத்துயரங்களை கல்வி மூலம் களைந்து அவர்களுக்கு உதவவே கல்வியை தேர்ந்தெடுத்தேன். உளவியல் மற்றும் சுகாதார பிரச்னைகளுள்ள மக்களை நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் தேவைக்காக உழைத்து வருகிறேன்.
2012 ஆம் ஆண்டு "Australia's Lost Generation" என்ற ஆவணப்படத்திற்காக நாம் உரையாடினோம். அப்போதிருந்த பிரச்னைகள், சூழல் ஏதேனும் மாறியுள்ளதா?
ஆஸ்திரேலியாவில்
தற்கொலை
விகிதம்
தேசியளவில்
பெருமளவு
குறைந்துவிட்ட
சூழலில், பழங்குடிகளின்
தற்கொலைகளில்
எவ்வித
மாற்றமுமில்லை. மேலும்
பல்வேறு
தற்கொலைகள்
நிகழ்ந்த
வண்ணமே
உள்ளன. விழிப்புணர்வு
தொடர்பாக
நிறைய
நிகழ்ச்சிகளை
நடத்தவேண்டும்
என
விரும்புகிறேன். கனடாவைச்
சேர்ந்த
பேராசிரியர்
மைக்கேல்
சாண்ட்லர், இந்நிலையை
சமூகத்தின்
அவலம்
என
குறிப்பிட்டார். பழங்குடி
சமூகங்களிடம்
இதுகுறித்து
விளக்கி
விழிப்புணர்வு
உருவாக்க
நேரம்
தேவைப்படுகிறது.
பழங்குடிமக்கள்
பிற
ஆஸ்திரேலியர்களை
விட
தீவிரமான
மனநலப்பிரச்னைகளால்
பாதிக்கப்பட்டுள்ளனரா?
பிற
ஆஸ்திரேலிய
மக்களை
விட
பழங்குடி
மக்கள்
இருமடங்கு
அதிகமாக
தற்கொலை
செய்துகொள்வது
ஆய்வு
உண்மை. இதனை வயதுரீதியாக
பிரிக்கும்போது
இளைஞர்கள்
அதிகளவு
தற்கொலையை
நாடுகின்றனர். இனவெறுப்பால்
பிளவுண்டு
இச்சமூகத்தில்
பழங்குடிகளுக்கு
போதுமான
வாய்ப்பும்
கிடைப்பதில்லை. காலனியாதிக்கத்தால்
பாதிக்கப்பட்ட
கனடா, அமெரிக்கா,
நியூசிலாந்து
உள்ளிட்ட
நாடுகளிலுள்ள
பழங்குடிகளும்
பெருமளவு
தற்கொலை
சம்பவங்களில்
பலியாகின்றனர்.
தற்கொலைக்கு
காலனியாதிக்கம்
முக்கிய
காரணமா?
பழங்குடிகளின் கையிலிருந்து நிலங்கள் வளர்ச்சி,
வனப்பாதுகாப்பு என்ற பெயரில் பிடுங்கப்பட வாழ வழியற்ற அவர்களின் முன்னேயுள்ள வாய்ப்பு
நாட்டைவிட்டு வெளியேறுவது அல்லது தற்கொலை செய்வது மட்டுமே. பழங்குடி சிறுவர்கள் குடும்பத்திலிருந்து
பிரிக்கப்பட்ட கல்வி புகட்டப்படுவது உளவியல்ரீதியிலான தாக்குதலாக மாறி அவர்களை வதைக்கிறது.
அண்மையில் இச்செயலுக்கு பிரதமர் கெவின் ரூட் மன்னிப்பு கேட்டது நெகிழ்ச்சி நிகழ்வு.
தேசியளவில்
இதற்கான மையங்களை அமைத்து பழங்குடிகளின் கலாசாரத்தில் அவர்களை வளர்த்து வருவதே ஒரே
தீர்ப்பு. அரசு பழங்குடி மக்களை ஆதரித்து வேலைவாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்வை
காலனியாதிக்க காயங்களிலிருந்து மீட்க உதவலாம்.
தனிப்பட்டவர்களுக்கு
குழுவாக பாதிக்கப்பட்ட இனக்குழுவிற்கும் மனநலம் சார்ந்த பிரச்னைகளில் எப்படி உதவிகளை
வழங்குவீர்கள்?
பழங்குடிகள்
அல்லது பிறர் தங்களது பிரச்னைகளை கூறி உதவிகளைக் கோருவது இயல்பான செயலாகியுள்ளது.
குறிப்பிட்ட இனக்குழு என்றில்லாமல், தற்கொலை நாட்டின் முக்கியப்பிரச்னை. நாட்டுமக்களின்
ஆரோக்கியத்தை அரசு முக்கியமாக கருதுவது இயல்பான ஒன்றுதானே!
|