ஜம்மு-காஷ்மீர் முந்தைய விதிகளை பற்றி பேசவேண்டும்! -உமர் அப்துல்லா





முத்தாரம் Mini

காஷ்மீரிலுள்ள சட்டப்பிரச்னைதான் என்ன?

ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் குழு, சட்டப்பிரிவு 370 ஐ அகற்றுவது ஒரே தீர்வு என கூறிவருகிறது. இதனை செயல்படுத்தினால் இந்தியா, ஜம்மு-காஷ்மீரை தன்னுடன் இணைக்கும்போது கூறிய விதிகள் குறித்த வாதங்களை நாம் மீண்டும் பேசவேண்டியிருக்கும்.

வேறு என்னதான் தீர்வு?

காஷ்மீர் தன்னாட்சி நிலையை அடைவதே எங்கள் கட்சி(NC) நிலைப்பாடு. பாஜக, காஷ்மீரை இந்தியாவோடு இணைப்பதையும் ஹூரியத் அமைப்பினர் சுதந்திரம் அல்லது பாகிஸ்தானோடு இணைத்துக்கொள்வதையும் அமைதிக்கு தீர்வாக கூறுவார்கள்.

தன்னாட்சி என்பது புத்திசாலித்தனமான தீர்வென நம்புகிறீர்களா?

தன்னாட்சி திட்டங்களை அரசு முன்வைத்தால் நிச்சயம் விவாதிக்கலாம். நடைமுறையில் அணு ஆயுத நாடுகளை(சீனா,பாகிஸ்தான்,இந்தியா) எல்லையில் வைத்துக்கொண்டு காஷ்மீர் தன்னாட்சியாக செயல்பட வாய்ப்பு குறைவு.

அரசுக்கு எதிராக தீவிரவாதக்குழுக்களில் இளைஞர்கள் பெருமளவில் சேர என்ன காரணம்?

பாஜவும்,மக்கள் ஜனநாயக கட்சியும் காஷ்மீரில் ஏற்படுத்திய வன்முறையான சூழல்தான் இதற்கு காரணம்.


- உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர்(காஷ்மீர்