தொன்மை நாகரிகங்கள்!
நாகரிகத்தின் தடம்!
Bhirrana, Mehrgarh
இரண்டு மில்லியன் ச.கி.மீ ஹரப்பா நாகரிகம் பரவியிருந்த பரப்பு இது. இரண்டாயிரம் இடங்களில் பிராணா, மெஹ்கார் ஸ்பெஷலானவை. இங்கு கற்காலம் தொடங்கி, சிந்துவெளி நாகரிகம் வரையிலான பரிணாம
வளர்ச்சி பற்றிய குறிப்புகள் கிடைத்தன.
1920க்கு பிறகு கண்டறியப்பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய கலாசார இடம். சிந்து, பாகிஸ்தான் உள்ளடங்கிய 250 ஹெக்டேர்களை யுனெஸ்கோ 1980 ஆம் ஆண்டில் தொன்மையான இடமாக அறிவிக்கப்பட்டது.
Harappa(2800-1300BC)
ரவி ஆற்றுப்பகுதி அருகேயுள்ள கிராமத்தின் பெயர் 150 ஏக்கரில் பரந்து விரிந்த சிந்துவெளி நாகரிகத்திற்கு சூட்டப்பட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியின்போது இவ்விடம் பெருமளவு சிதைவுக்குள்ளானது.
Rakhigarhi(5500-1900 BC)
டெல்லியிலிருந்து 156 கி.மீ தொலைவில் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள
சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த தொன்மை இடம் இது. கி.மு 5500 ஆண்டு தொன்மையான இந்த இடம் காஹார் ஆற்றிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.