மனித உரிமை ஆர்வலர்களை ஒடுக்கும் சவுதி!



Image result for saudi human rights violations


சர்வாதிகாரப்பிடியில் சவுதி!

உலகளவில் பெண்களின் மேம்பாட்டிற்கு பாடுபட்டு ஐ.நா அமைப்பினால் விருது பெற்றுள்ள சமார் படாவி மற்றும் நஸிமா அல்-சடா உள்ளிட்ட பெண்ணுரிமை செயல்பாட்டாளர்களை சவுதி அரேபியா அரசு கைது செய்துள்ளது. கடந்த மே 15 அன்று தொடங்கிய பெண்ணுரிமை போராட்டங்களை தொடர்பாக இவர்களோடு மேலும் பல்வேறு போராட்டக்காரர்களையும் அரசு மூர்க்கத்தனமாக கைது செய்து வருகிறது.

2012 ஆம் ஆண்டு ஐ.நா அமைப்பால் துணிச்சல் பெண் என விருது பெற்ற படாவி, பெண்கள் வாகனம் ஓட்டவும் முனிசிபல் எலக்‌ஷன்களின் ஓட்டுபோடவும் பல்வேறு மனுக்களை அரசுக்கு எழுதி அனுப்பிய போராளி. க்வாடிஃப் பகுதியைச் சேர்ந்த அல்-சடா, 2015 ஆம் ஆண்டு உள்ளூர்தேர்தலில் பங்கேற்று பின் போட்டியிட மறுக்கப்பட்ட வரலாறு கொண்டவர். "சீர்திருத்த பாதையில் நடைபோடும் என எதிர்பார்க்கப்பட்ட சவுதி அரேபியா தொழிலதிபர்கள், பெண்ணுரிமையாளர்கள், சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டோரை கைது செய்வது அரசின் சர்வாதிகார எண்ணத்தை வெளிப்படுத்துகிறது" என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த சாராலெ வொய்ட்சன். அல்-சடா, படாவி இருவரின் கைது குறித்தும் சமூக வலைதளத்தில் மௌனம் நிலவுவதற்கு காரணம் அரசின் சர்வாதிகார கைது நடவடிக்கைகளே. படாவியின் முன்னாள் கணவர் அபு அல்-கைர் செய்த மனித உரிமை பணிகளுக்கு 15 ஆண்டு சிறைதண்டனையும், படாவியின் சகோதரர் வலைப்பூவில் எழுதிய குற்றத்திற்காக பத்து ஆண்டு தண்டனையையும் சவுதி அரசு விதித்தது. இவர்களிருவரையும் விடுவிக்க படாவி போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான இடுகைகள்