இடுகைகள்

குளியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளித்தால் கலோரிகள் குறையுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி குளித்தால் கலோரிகள் குறையுமா? குளித்தால் இறந்த தோல் செல்கள் நம் உடலை விட்டு நீங்கும் என்பதுதான் ஆராய்ச்சி உண்மை. ஆனால் நீங்கள் கேட்டது போன்ற சமாச்சாரத்தையும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு, லாப்போரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குளியல் பற்றி ஆராய்ந்து ஓரு உண்மையைக் கண்டுபிடித்தனர். அதன்படி, குளித்தால் உடலின் வளர்சிதை மாற்ற வேகம் மாறுபடுகிறது என்று கண்டறிந்தனர். எப்படி பார்த்தாலும் குளித்து கலோரிகளை குறைக்க முடியாது. அப்படி குறைக்க வேண்டும் என்றால்,  இதமான வெந்நீரில் ஒருமணிநேரம் குளிக்கவேண்டும். அப்படி குளித்தாலும் பிரிட்டானியா டைகர் பிஸ்கட் சாப்பிட்டால் உடலில் சேரும் கலோரிகளை மட்டுமே குறைக்க முடியும். தோராயமாக 61 கலோரிகள். எனவே இப்படி கேள்வி  கேட்பதை விட்டுவிட்டு பதினைந்து நிமிடங்கள் நடந்தால் போதும். எளிமையாக உடலின் கலோரிகள் குறையும்.

தெரிஞ்சுக்கோ - பாத்டப் குளியல்!

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! ஆங்கிலப்படங்களில் குளியலறைத் தொட்டியில் நாயகி படுத்து குளிப்பதை தரிசித்திருப்பீர்கள். படம் பார்ப்பதே அதற்குத்தானே? பாத்லப்பில் லக்ஸ் சோப்பு போட்டு நுரைக்க நுரைக்க குளித்து எழுவது, அசப்பில் எருமை குளத்தில், வாய்க்காலில் சுகமாக குளித்து பின் மேய்ச்சலுக்கு செல்லுவது போலவே இருக்கும். பாத்டப் குளியல் என்பது நிதானமாக குளிப்பது. குளித்த பிறகு அத்தண்ணீரை கொட்டிவிட்டு புது தண்ணீரை பிடித்து வைத்தால் அடுத்த வேளை குளியல் ரெடி. அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். குளியலறை கலை என்ற பெயரில் மட்டும் 4,54,000 இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாத் பாம் நிறுவனம் ஆண்டுதோறும் சம்பாதிக்கும் தொகை 20 மில்லியன் டாலர்கள். கிளாசியர் அழகு கம்பெனி நிறுவனர் எமிலி வெய்ஸ், தினசரி 45 நிமிடம் வெந்நீர் குளியல் போட்டால்தான் சுகம் கிடைக்கிறது என்கிறார். அதுவும் இரவில் இப்படி குளியல் போடுகிறாராம். பாத்டப்பில் 8.4 அவுன்ஸ் அளவு கொண்ட 55 டாலர் விலைகொண்ட சோப்புக்குமிழ்களை உருவாக்கும் திரவத்தை வெய்ஸ் பயன்படுத்துகிறார். குளியல் பொருட்களுக்கா

சாப்பிட்டபிறகு உடனே குளித்தால் ஆபத்தா? - மிஸ்டர் ரோனி

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்தபிறகு குளிக்க வேண்டுமா? நாம் அப்படி நினைத்து வருகிறோம். ஆனால் அது தேவையில்லை என்று பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் கூறி வருகின்றன. 1960ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், இதுபற்றிய நமது கருத்து தவறு என்று கூறியது. இக்காலகட்டத்தில் நீச்சல் வீரர்களுக்கு பல்வேறு நேரங்களில் உணவு வழங்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன்மூலம், அவர்களின் உடல்நலனுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்று ஆராய்ந்தனர். ஆனால் உடல்நலன் பாதிப்பிற்கு எந்த ஆதாரமுமில்லை என்று நிரூபணமானது. 2005, 2011 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற ஆராய்ச்சிகளும் இதனை நிரூபித்தன. எனவே சாப்பிட்டபிறகு ஒரு மணிநேரம் காத்திருந்து குளிக்க வேண்டியதிலை. அதற்கு முன்பே குளித்துவிட்டு சாப்பிடுங்கள். மேற்சொன்ன ஆராய்ச்சிகளைப் படிக்க வேண்டிய தொல்லை மிச்சம் பாருங்கள். நன்றி: பிபிசி