பொறுப்பை கைகழுவிய நிறுவனங்கள் - சிஎஸ்ஆர் 4
அன்லாக் இம்பேக்ட் அத்தியாயம் 4 பெருநிறுவன சமூகப் பொறுப்பு! குளறுபடி செய்த நிறுவனங்கள்! இந்திய அரசு, 1960களுக்குப் பிறகு கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றியது. மத்திய அரசு, சோசலிச கருத்தைப் பின்பற்றி பல்வேறு துறைகளிலும் பொதுநிறுவனங்களைத் தொடங்கியது. இதனால் தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட வாய்ப்பு குறைவாக இருந்தது. அப்படித் தொடங்குவதற்கு அரசிடம் உரிமம் பெறுவது, இமயமலை ஏறுவது போன்ற செயல்முறையாக இருந்தது. தொண்ணூறுகளுக்குப் பிறகு, இந்தியச்சந்தையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் அமலாகின. இதன் விளைவாக, அரசின் கட்டுப்பாடு சந்தையில் தளர்ந்தது. தனியார் நிறுவனங்கள் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிகராக போட்டி போடத் தொடங்கின. இந்தியா தன் வளங்களைக் கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. கிளிப்ஆர்ட் லோகோ தனியார் நிறுவனங்களான டாடா, பிர்லா, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை முன்பிருந்தே ஈடுப...