இடுகைகள்

கடல்மண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒடிஷாவில் அழிவைச் சந்தித்து வரும் கடலோர கிராமங்கள்! - கடல்மண் அரிப்பால் நேரும் பரிதாபம்!

படம்
                  ஒடிஷாவில் அழியும் கிராமங்கள் ஒடிஷாவில் உள்ள கேந்திர பாரா மாவட்டத்தில் கடற்புற பகுதியில் ஏழு கிராமங்கள் உள்ளன . இதில் மொத்தம் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர் . இங்கு மெல்ல கடல் மணல் உள்ளே புகுந்து வருவதால் , அங்குள்ள மக்கள் வேறிடம் நோக்கி நகர்ந்து வருகி்ன்றனர் . மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் அடிபம்பு கூட அரைப்பகுதி மணலால் மூடப்பட்டுவிட்டது . இங்குள்ள கால்நடை கொட்டில் , கோவிலைக் கூட கைவிட்டு மக்கள் வெளியேறத்தொடங்கிவிட்டனர் . மக்கள் கைவிட்ட அந்த கோவிலுக்கு வந்து போகும் ஒரே பார்வையாளர் பக்தர் பிரபுல்ல லெங்கா என்பவர்தான் . கடல்மண்ணில் ஏற்பட்ட அரிப்பால் , ஏழு கிராமங்களும் ஒடிஷா மாநில வரைபடத்தில் இருந்து விரைவில் காணாமல் போகவிருக்கிறது . 571 குடும்பங்களுக்கு வேறு இடங்களுக்கு சென்று வாழ்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது . பிஜூ புக்கா கர் யோஜனா எனும் திட்டத்தின்படி மக்களுக்கு வீடு கட்டித்தரப்படுகிறது . இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கேரளா , தமிழ்நாடு , கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களுக்கு கூலித்தொழிலாளிகளாக சென்று வேலை ச