இடுகைகள்

காதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இருவரும் இந்தியாவின் சுயசார்பை

ராணுவத்தினருக்கு காதி உடைகள்தான் இனி! - மேட் இன் இந்தியா முடிவு!

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் தாண்டி இப்போதுதான் யோசிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது பருத்தி மற்றும் கலப்பின இழைகளால் ராணுவ உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் பத்து லட்சம் பேருக்கு காதி வகை உடைகள் தயாரித்து வழங்கப்படவிருக்கின்றன. உள்துறை அமைச்சரின் சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொண்ட இந்தியாவிலுள்ள படைகளின் தலைமை காதி இயக்குநரை சந்தித்து பேசிவருகின்றனர். இதன்மூலம் காதியின் வளர்ச்சி  75 ஆயிரம் கோடியாக உயரும் என்கிறார் அதன் இயக்குநரான வினய் குமார் சக்சேனா. பருத்தியோடு கம்பளியையும் சேர்த்து உடைகளை நெய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இவற்றோடு உற்பத்தி துறைகளையும் அரசு பயன்படுத்திக்கொள்ள நினைத்தால் நாம் பிற நாடுளில் போர் தளவாடங்களைக் கூட நிறைய வாங்க வேண்டி இருக்காது. நன்றி - இடி