காதலை, அன்பை சுரண்டலுக்கு பயன்படுத்தும் பெண்களை கொள்ளையடிக்கும் புத்திசாலி!
புத்திவந்தா கன்னடப்படம் உபேந்திரா, சலோனி, பூஜாகாந்தி, லஷ்மி இயக்குநர் ராம்நாத் இசை விஜய் ஆன்டணி தமிழில் வந்த நான் அவன் இல்லை என்ற ஜீவன் நடித்த படத்தை கன்னடத்தில் உப்பி நடித்திருக்கிறார். ஐந்து பெண்களை ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதோடு, கல்யாணம் செய்து வைத்தால் காமத்தையும் அனுபவித்து எஸ்கேப் ஆகி, பிடிபட்டபிறகு நீதிமன்ற கூண்டில் கூட நான் அவன் அல்லா என்று சொல்லி வாதிடுவதே கதை. படத்தின் கிளைமேக்சை மாற்றியிருக்கிறார்கள். அதுவும் நன்றாகவே இருக்கிறது. இறுதியாக நீதிபதியின் மகளான பூஜாகாந்தி, நாயகனை துணை சேர்கிறார். அது கொஞ்சம் காமிக்கலாக இருக்கிறது. கல்யாண மன்னன், கல்யாண ராணி என பூந்தி பத்திரிகையில் விளக்கமாக எழுதுவார்களே அதுவே. பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். கல்யாண மன்னன் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை விரிவாக காட்டுகிறார்கள். விஜய் ஆன்டணி பின்னணி இசையில் சோபிக்கவில்லை. ஆனால், தமிழ் பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். பாடல்களை கன்னடத்தில் எழுதிவிட்டார்கள் என்பதால் ரசிப்பதில் பிரச்னை இல்லை. வெளிப்பகட்டுக்கு மயங்கி பேராசைப்படும் பெண்கள். அவர்களை பஞ்சாமிர்தம் என்ற உபேந்திர...