இடுகைகள்

கல்யாணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாணம் சார்ந்து ஏற்பட்ட மன உளைச்சல்கள் அதிகம்!

படம்
  நரசிங்கபுரம் 6/6/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? கடந்த சில நாட்களாக டெலிகிராமில் மெசேஜ் எதுவும் வருவதில்லை. தினமும் செக் பண்ணுவேன். கடந்த 28.5.2023 அன்று எழுதியிருந்த கடிதத்தில், போன் ரிப்பேர் ஆனதைச் சொல்லியிருந்தீர்கள். எதற்கு உங்களை டிஸ்டர்ப் செய்யுறது?ன்னு போன் போடவில்லை. சில விஷயங்களால் மன உளைச்சல் அதிகம். கடிதத்தில் நண்பர் ஜெகன் பற்றி சொல்லியிருந்தீங்க. அவருக்கு ஏற்பட்ட நிலை இன்று எனக்கும்… பெண்கள் சுயநலவாதிகள். தானும், தனக்குரியவரும் மட்டுமே நல்லா இருந்தா போதும். யார் எப்படிப் போனாலும் கவலை கொள்ளாத மூடர்கள். இதை அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தனர். தனிக்குடித்தனம் பற்றிய பேச்சை பெண் வீட்டார் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். இதைக் கேட்டதும் கவலையாக உள்ளது. வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். அப்பா, பாவம். வரன் கிடைப்பதே கஷ்டம். கெடச்சாலும் இப்படியான கண்டிஷன்ஸ். அவரின் பட்ஜெட்டில் இடி இடிப்பது போல உணர்கிறார். பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் இந்த சூழலில் தனிக் குடித்தனம் அவசியமா? இப்பவே

காதலனைப் பள்ளித்தோழியோடு சேர்த்து கல்யாணம் செய்து வைக்கும் காதலி! தி வெட்டிங் அன்பிளானர்

படம்
  தி வெட்டிங் அன்பிளானர் மெரினா, கார்லோஸின் அட்டகாச நடனம் தி வெட்டிங் அன்பிளானர்   மெரினா சிறுவயதாக இருக்கும்போதே அவளது பெற்றோர் விவகாரத்து பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு மெரினாவின் அப்பா, தனது வீட்டுக்கு அருகில் உள்ள பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது காரணமாக அமைகிறது. காதல் என்பது பைத்தியக்காரத்தனம் என அப்பா போகும்போது சொல்லும் வார்த்தை மெரினாவின் மனதில் பதிகிறது. எனவே, அவள் ஆண் தோழன் என யாரையும் ஏற்பதில்லை. திருமணமும் செய்யக்கூடாது என முடிவாக இருக்கிறாள். அவளது வாழ்க்கையில் வரும் கார்லோஸ் என்பவன் ஏற்படுத்தும் பிரச்னைகள், அதன் விளைவுகள்தான் கதை. இரண்டு பெண்கள் ஒரு ஆண் என அடிப்படையில் முக்கோண காதல் கதைதான். படத்தில் சுவாரசியமாக இருப்பது மெரினாவின் குணங்கள் பற்றி மெல்ல பார்வையாளர்களான நமக்குத் தெரிய வருவதுதான். இந்த வகையில் அவர் தனக்கு பிடித்த விஷயங்களை அவ்வளவு எளிதாக பிறருக்கு விட்டுக்கொடுப்பவர் அல்ல. தன்னை அவமானப்படுத்தியவர்களை காலம் கடந்தும் வாய்ப்புகள் அமையும்போது பழிவாங்குகிறார். இதில், அவள் நேசிக்கும் காதலன் கூட உண்டு என்பதுதான் வினோதம். மெரினா, காதலே வாழ்க்கையில் நுழைய விடாமல

கல்யாணம்.... ஆஹா கல்யாணம்! - கடிதங்கள்

  கல்யாணம் ஆஹா கல்யாணம்!    வடக்குப்புதுப்பாளையம்                                                    அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நான் நேற்று பூப்புனித நீராட்டு விழா ஒன்றுக்கு சென்றேன் . பெரியம்மாவின் பேத்திக்கான விழா . அம்மாவைக் கூட்டிக்கொண்டு பூந்துறை மண்டபத்திற்கு சென்றேன் . நல்ல கூட்டம் . நான் அங்கு எதுவும் சாப்பிடவில்லை . அம்மா சாப்பிட்டுவிட்டு வந்தார் . எனக்கு சில உறவினர்களை அடையாளம் காட்டினார் . பலருக்கும் எனது சகோதரர் குமார் அளவுக்கு நான் பழக்கம் ஆகவில்லை . அதில் வருத்தம் ஏதுமில்லை . விழாவில் எனக்கு பாடம் எடுத்த கல்லூரி ஆசிரியர் ஒருவரைப் பார்த்தேன் . எப்போதுமே பதற்றமாகவே பாடம் எடுப்பவர் , இப்போது வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கல்யாணம் செய்து வைப்பதையும் வேலையாக செய்து வருகிறார் . திருமணம் பற்றி விசாரித்தார் . ஆனால் அதற்கு நான் பதில் சொல்லுவதை அவர் விரும்பவில்லை . அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்க நினைப்பதற்குள் அடைமழை பெய்வது போல அவரது திருமணம் செய்து வைக்கும் வேலைகளைப் பற்றி பேசிவிட்டு சென்றுவிட்டார் . கல்லூரியில் அவரது பாடம் நடத்தும் ப

சோலோவாக வாழ்பவனின் வாழ்வை மடக்கி சுருட்டும் காதல் சுனாமி! -

படம்
          சோலோ பிரதிக்கே சோ பெட்டர்  Director: Subbu Writer: Subbu Stars: Ajay , Vennela Kishore , Kalyani N     இருபது வயதில் கொடி ஏந்தி போராடும் மாணவர்கள் சாய் தரம் தேஜின் உருவப்படத்தை தீ வைத்து எரிக்கின்றனர். அதனை வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சாய் தனது கதையை நமக்கு சொல்லுகிறார்.  காதலும், கல்யாணமும் நமது சுதந்திரத்தை நம்மிடம் இருந்து பறித்துவிடும் என்று நினைக்கும் சாய் தரம் தேஜ், அதனை புத்தகமாக எழுதி கல்லூரியில் விற்பனை செய்து தனக்கு பின்னால் மாணவர்களை திரட்டுகிறார். இதற்கு காரணம் அவருக்கு அவருடைய வேணு மாமா சொல்லும் விஷயங்கள்தான் உந்துதலாக உள்ளன. திருமணம் செய்யாதவர்களை ஆதர்சமாக வைத்துள்ளவர் தன் பெற்றோரிடம் கூட ஒட்டுதலாக நடந்துகொள்வதில்லை. வேலை கிடைத்ததை கூட சொல்லாமல் ஹைதரபாத்திற்கு செல்கிறார். அங்கு சென்று ஈவன்ட் மேனேஜ்மெண்ட் வேலையை ஏற்கிறார். அந்நகரில் அவர் நினைத்த கொள்கைக்கு மாறான விஷயங்கள் நடக்கின்றன. அவரது நண்பர்கள் மெல்ல திருமண வாழ்க்கை செய்து செட்டிலாகின்றனர். மெல்ல வாழ்க்கை யதார்த்தம் புரிந்து சாய் வாழத் தொடங்கினாரா அ

5 கோடிக்கு மேல் சொத்துமதிப்பு இருந்தால் அதுதான் எலைட் கல்யாணம்! - இந்தியாவில் பரபரக்கும் கல்யாண பிசினஸ்

படம்
    yaastudio/vinodh       கல்யாணம் செய்வது என்பதைச் செய்ய சிலர் கொரானோ சரியான காலம் என்று தேர்ந்தெடுத்து வருகிறார்கள். ஆனால் பலரும் கல்யாணம் கிராண்டாக நிறைய செலவு செய்து நடைபெறவேண்டும். கல்யாணத்திற்கு வருபவர்கள் பலரும் ஆச்சரியப்படவேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதற்கு நிறைய நிறுவனங்கள் ஏற்றாற்போல செயல்பட்டு வருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தைப் பார்க்கப் போகிறோம். குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரைச் சேர்ந்த அல்ட்ரா ரிச், என்ற நிறுவனம் குறைந்த பட்சம் ஒருவரின் சொத்து மதிப்பு 15 கோடி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்து கல்யாணம் செய்து வைத்து வருகிறார். இப்படி கல்யாணம் செய்பவர்களை இவர் கண்டறியவது, வாய்மொ்ழி விளம்பரம் வழியாகத்தான். ஆனால் யாருடைய பெயரையும் சொல்லவேமாட்டேன் என்று சொல்லிவிட்டார் கோஸ்வாமி. இவர்களுடைய திருமணம் நிறைய கடினமான சூழல்களை தாண்டி வரும். சாதாரண திருமணங்களைப் போன்ற விஷயங்களில் இதில் நடைபெறாது என்கிறார் கோஸ்வாமி. ஒரு திருமணத்திற்கான வரன்களைப் பார்த்து தருவது அதற்கான ஏற்பாடுகளை் ச் செய்வது ஆகியவற்றுக்கு கோஸ்வாமி 5 லட்சம் ரூபாய் வாங்குகிறார்.இங்கு நாம் குறிப்பிட்டுள்ள தொகை கல்யாண தரப

காசைத் திருப்பிக் கொடுங்க ப்ரோ! - மேட்ரிமோனியல் காமெடி

படம்
டைம்ஸ்! திருமணங்களுக்கான சரியான வரன்களைத் தேடிக் கொடுப்பது முக்கியமான பணி. அதேசமயம் சரியாக அமைந்தால் மட்டுமே காசு  கிடைக்கும். இல்லையென்றால் அவமானமும், வசைபாடலும்தான் மிச்சம். பஞ்சாபின் மொகாலியில் சரியான வரன் பார்த்துக்கொடுக்காத கல்யாண ஏஜன்சி இழப்பீடு தரும் அவலத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன ஆச்சு.... நொரைன் என்ற டாக்டர் பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டியதுதான் புராஜெக்ட். அதில்தான் ஏஜன்சி சறுக்கியிருக்கிறது. 2017இல் இருந்து வரன் தேடி ஓய்ந்திருக்கிறது ஏஜென்சி. பணக்கார ர்கள் இல்லையா? 50 ஆயிரம் கட்டி ப்ரீமியமாக வரன் தேடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட நகரில் இருப்பவராக, ஜாட் சாதியைச் சேர்ந்தவராக, டாக்டராக இருக்கவேண்டும்  என்பதுதான் விதி. ஏஜன்சி கொடுத்த வரன்களை எல்லாம் ஊதித்தள்ளியிருக்கிறது பெண் தரப்பு. காரணங்களுக்கா பஞ்சம்? அப்புறம் பணத்தைக் கேட்டிருக்கிறது பெண் தரப்பு. பின்னே வேலை ஆகவில்லையே... பணம் தர முடியாது என நிறுவனம் சொல்ல நுகர்வோர் கோர்ட்டுக்கு படி ஏறியிருக்கிறது மருத்துவர் தரப்பு. கோர்ட் மனுவை பரிசீலித்து 62 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது. இதெல்லாம்

பேச்சுலர் பார்ட்டி ரகசியங்கள்! - தெரிஞ்சுக்கோ டேட்டா!

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! வண்டி வாங்கினாலும் சரி, ஃபேப் இந்தியாவில் காட்டன் குர்தா வாங்கினாலும் சரி ட்ரீட் வெச்சே ஆகணும் என அடம்பிடிக்கிறார்கள் மில்லினிய அன்பர்கள். அப்புறம் வேற வழி? இன்று குறிப்பிட்ட தின கொண்டாட்டங்களை விட வலிய உருவாக்கும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் ஹேங் ஓவர் சினிமாக்களிலேயே வந்துவிட்டது. உடனே இந்தியாவுக்கு டவுன்லோடு செய்யும் பழக்கம் உருவாகி வருகிறது. அதுபற்றிய ஜாலி டேட்டா! கடந்த ஆண்டில் மட்டும் பேச்சுலர் பார்ட்டிக்கு செலவான தோராய தொகை 1400 டாலர்கள். இங்கிலாந்தில் பேச்சுலர் பார்ட்டி சந்தை மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. ஒருவருக்கு இந்த பார்ட்டியில் ஆகும் செலவு 471 பவுண்டுகள் ஆகும். குறைந்தது இப்பார்ட்டியில் பத்து பேர் கலந்துகொள்கிறார்கள். மூன்று நாள் பேச்சுலர் பார்ட்டியில் தோராயமாக 5 காக்டெய்ல் பானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகளவில் கல்யாண சந்தை மதிப்பு 300 பில்லியன் டாலர்களாக உள்ளது. நன்றி- க்வார்ட்ஸ் 

காதல் மன்னன் கல்யாண மாலைக்கு ரெடியாவதுதான் இந்த ஹிப்பி!

படம்
ஹிப்பி - தெலுங்கு டிஎன் கிருஷ்ணா ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர் இசை: நிவாஸ் கே பிரசன்னா ஆஹா பொங்கி வழியும் இளமை, திகங்கனாவின் அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம். பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் பிரமாதம். நிவாஸின் இசை காதில் தென்றலாக ஒலிக்கிறது. நவீன காதலர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும், லிவ் இன் உறவையும் காட்டியிருக்கிறார்கள். நாயகிக்கு நிகராக சட்டையே வேண்டாம், என நாயகன் கார்த்திகேயா அடிக்கடை வெற்று மேலாக சுற்றுகிறார். சிக்ஸ்பேக் உடம்பு வைத்திருக்கிறார். அதற்காக சட்டையை கழற்றிப்போட்டுக்கொண்டே இருந்தால் எப்படி ப்ரோ? நாங்க ஹீரோயினைப் பார்ப்போமா இல்லை உங்களைப் பார்ப்போமா? ஹிப்பியாக தெருவில் சண்டை போட்டு கிடைக்கும் காசை பெண்களுக்குச் செலவு செய்த மஜாவாக இருக்கும் தேவா, எப்படி அமுல்யதாவிடம் காதல் சொல்லி கைமா ஆகிறார் என்பதுதான் கதை. கதையிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் நீங்கள் இதில் என்ன எதிர்பார்க்க முடியும் என்று. அதை மட்டுமே இயக்குநர் தர முயற்சி செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோரின் காமெடி கச்சிதமாக வேலை செய்கிறது. படம் இளைஞர்களுக்கானது என்பதால், பத்தாவது படிக

லவ் இன்ஃபினிட்டி: நீ கேட்டதை நான் தரல. சாரிடா

படம்
freepik.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அஷ்ரத், விக்கி ஸ்டார் கடிதம் இரண்டு கவிக்கு Phone பண்ணவே முடியலை. Line ஏ கிடைக்கல. கவிதாக்கா வீட்டுக்கு பண்ணினேன். நீ அவங்க வீட்டுக்குப் போய் 2 வாரம் ஆச்சாம். உன்னை Evening (monday) வரச்சொன்னாங்க. அப்புறம் Future ல் IAS ஆயிட்டா எனக்கு ஒரு நல்ல Post வாங்கித் தருவியா? அப்படி IAS ஆனால் யார் யாருக்கு என்னென்ன செய்வ. குறிப்பாக Family, Society etc. அப்புறம் கவிக்கு கூட நல்ல Future இருக்கில்ல. அவங்க Aim அடையற வரைக்கும் அவங்க அப்பாம்மா பொறுமையாக இருப்பாங்களா? சரி என்னுடைய Aim or எண்ணம் என்னன்னு தெரிஞ்சுக்க. நான் சொந்த தகுதில நல்ல Post டுக்கு வரணும். என் செலவில் யாராவது இரண்டு அனாதை குழந்தைகளை atleast பிளஸ் டூ வரையாவது படிக்க வைக்கணும். அப்புறம் social work பண்ண எனக்கு ரொம்ப ஆசை. யாராவது பொது இடத்தில் பெரியவங்க , குழந்தைங்க கஷ்டப்பட்டா அழுகையா வருது. (நமக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா என்ன செய்யறது? Or இரக்க குணமோ?)  அவங்களுக்கெல்லாம் Help பண்ண ஆசைப்படுவேன். ஆனா ஏதோ ஒண்ணு தடுக்கும். அப்புறம் என் Marriage க்குப் பின்