லவ் இன்ஃபினிட்டி: நீ கேட்டதை நான் தரல. சாரிடா
freepik.com |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அஷ்ரத், விக்கி ஸ்டார்
கடிதம் இரண்டு
கவிக்கு Phone பண்ணவே முடியலை. Line ஏ கிடைக்கல. கவிதாக்கா வீட்டுக்கு பண்ணினேன். நீ அவங்க வீட்டுக்குப் போய் 2 வாரம் ஆச்சாம். உன்னை Evening (monday) வரச்சொன்னாங்க.
அப்புறம் Future ல் IAS ஆயிட்டா எனக்கு ஒரு நல்ல Post வாங்கித் தருவியா? அப்படி IAS ஆனால் யார் யாருக்கு என்னென்ன செய்வ. குறிப்பாக Family, Society etc.
அப்புறம் கவிக்கு கூட நல்ல Future இருக்கில்ல. அவங்க Aim அடையற வரைக்கும் அவங்க அப்பாம்மா பொறுமையாக இருப்பாங்களா?
சரி என்னுடைய Aim or எண்ணம் என்னன்னு தெரிஞ்சுக்க. நான் சொந்த தகுதில நல்ல Post டுக்கு வரணும். என் செலவில் யாராவது இரண்டு அனாதை குழந்தைகளை atleast பிளஸ் டூ வரையாவது படிக்க வைக்கணும். அப்புறம் social work பண்ண எனக்கு ரொம்ப ஆசை. யாராவது பொது இடத்தில் பெரியவங்க , குழந்தைங்க கஷ்டப்பட்டா அழுகையா வருது. (நமக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா என்ன செய்யறது? Or இரக்க குணமோ?) அவங்களுக்கெல்லாம் Help பண்ண ஆசைப்படுவேன். ஆனா ஏதோ ஒண்ணு தடுக்கும்.
அப்புறம் என் Marriage க்குப் பின்னால் எனக்கு குழந்தை இல்லைனாக்கூட 2 குழந்தைகளை Or One தத்தெடுத்து வளர்ப்பேன்.
அப்புறம் ரூபாவுக்கு lr நான் போடறதப் பத்தி நீ எதுவும் சொல்லல. வேண்டாமா?
நீ அசிங்கமாக இருக்கீன்னு யார் சொன்னது? எப்பப்பாரு, உன்ன நீயே தாழ்த்திக்காதே. அதுவும் முன்னேற துடிக்கிறவங்களுக்கு அந்த எண்ணமே வரக்கூடாது.
நீ நல்லாத்தான் இருக்கே. உன் Friend நான் சொல்றேன் Please நம்பு. முன்னயே ஒரு தடவை சொல்லியிருக்கிறேன். உன்னோட Value உனக்கு தெரியாதுன்னு.
உன்னைப் பத்தி என் தாத்தா ஆத்தான்னு ரெண்டு பேர்கிட்டேயும் சொல்லியிருக்கேன். ரொம்ப Friendsனு. உன்னோட Photo கூட காமிச்சேன். ஆனா ஏதாவது Problem ஆகுமோன்னு பயமா இருக்கு. ஆனாலும் என் ஆத்தாவை Support க்கு இழுத்துக்குவேன்.
100rs கிடைத்ததா? நான் நம்பியிருந்த இடத்தில் காசு கிடைக்கவில்லை. Sorry Friend. நீ என்னிடம் முதன்முதலாய் கேட்டு ஒரு விஷயத்தை என்னால் கொடுக்க முடியவில்லை. மனமிருந்தாலும் கையில் இல்லை. இனி கிடைத்தால் தர்றேன்.
Sorry Sorry Sorry Sorry Sorry Sorry