சர்வம் தாளமயம்- தோல் உரித்த விரல்கள் மிருதங்கம் இசைக்குமா?
WORLDHAB |
சர்வம் தாளமயம்
ராஜீவ்மேனன்
ஏ.ஆர். ரஹ்மான்
கதையே தலைப்பில் சொல்லிவிட்டார்கள். கீழ் சாதியைச்சேர்ந்தவர் இசை கற்க முயல, சமூக ரீதியாக சாதி ரீதியாக என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதே கதை.
ஜி.வி.பியிடம் நாம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை. அவரால் முடிந்ததை செய்து விடுகிறார். விஜய் ரசிகராக வேறு நடித்திருக்கிறார். நாம் என்ன சொல்ல?
சொல்ல வந்த கான்செஃப்ட்டை ஓரளவு நேர்த்தியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன். அனைத்து காட்சிகளுக்கும் ஒத்துழைக்கிறது ஏ.ஆரின் இசை. அப்புறமென்ன. மனதில் மழையாய் பொழியும் பாடல்களைக் கேட்டபடி படத்தை பார்க்கவேண்டியதுதான்.
வேம்பு ஐயரிடம் மிருதங்கம் செய்து கொடுக்கும் பீட்டர், அதை வாசிக்க வாய்ப்பு கேட்கிறார். அவரின் தீவிர ஆர்வத்தை பார்த்து வேம்பு ஐயர் மனமிரங்கி பாடம் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அதைப் பிடிக்க முதன்மை சீடர் செய்யும் துரோகம், நண்பனின் பழிவாங்கல் ஆகியவை பீட்டரை நடுத்தெருவில் நிறுத்துகிறது. பீட்டர் என்ன செய்தார். பழிவாங்கினாரா, சுயமுன்னேற்ற பாடல்களை இயற்றினாரா, என்பதே கதை.
செக்சையும் மோட்டிவேஷனலாக இயக்குநர் மாற்றியிருக்கும் முற்போக்கு சிந்தனையை புரிந்துகொள்ளாமல் அவர் மீது வசைமாரி பொழிகிறார்கள். தவறு நண்பர்களே. இதே ஆங்கிலப்படம் என்றால் கூடுதல் சீன்கள் கேட்கிறீர்கள். ஆனால் தமிழில் வேண்டாம் என்றால் எப்படி?
பீட்டர் தன் குருவை அவமானப்படுத்திய டிவி நிகழ்ச்சியில் ஜெயித்து இசையை நிரூபிக்கிறார். அதோடு இசை என்பது குறிப்பிட்ட இனம் சார்ந்தது என்ற அவலத்தையும் உடைக்கிறார். இதில் வேம்பு ஐயர் பேசும் வசனங்கள் அனைத்தும் கிளாஸ்.
மற்றபடி டிவி அரசியல், இசை அரசியல் என சில இடங்களில் பேசிவிட்டு கடக்கிறார்கள். மற்றபடி பரிதாபமாக வராண்டாவில் நாயகனுக்கு சுயமுன்னேற்ற பிரார்த்தனை செய்யும் அபர்ணாவை இன்னும் கொஞ்சமே நடிக்க வைத்திருக்கலாமே சார். குமரவேல் உட்பட பலரும் முடிந்தளவு நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
உண்மையில் ஏ.ஆரும் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு இசை அமைக்கவேண்டிய நேரம் இது.
- கோமாளிமேடை டீம்