உடல் தன்னை புதுப்பித்துக்கொள்கிறதா?












உடல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னை புதுப்பித்துக்கொள்கிறதா?


ஏழு ஆண்டுகளுக்கு பிறகு புதிய மனிதனாக புதிய செல், புதிய டிஎன்ஏ என பாம்பு போல சட்டை உரித்து வந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்படிக்கூறுவது உண்மையாக என்று பார்ப்போம்.

நம் உடலிலுள்ள செல்கள் மிடோசிஸ் என்ற பெயரில் புதிய செல்களை உருவாக்கிக் கொள்கிறது. தானாக இச்செல்கள் தம்மை பிரதியெடுத்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்கின்றன. இரண்டாவது, ஸ்டெம் செல்களிலிருந்து புதிய செல்களை உருவாக்குவது. இதில் ரத்த செல்கள் மற்றும் நரம்பு செல்கள் மட்டும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள முடியாதவை.


செல்களின் வாழ்நாளை எளிதாக கணிக்க முடியாது. நம் வயிற்றிலுள்ள செல்கள் இரு நாட்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. உடலின் தோல் செல்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை இறந்து பிறக்கின்றன.

ரத்த செல்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. வெள்ளை அணுக்கள் வாரத்திற்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்து புதிதாக்கிக் கொள்கிறது. நம் உடலிலுள்ள எலும்புகள் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகிறது.

நன்றி: க்யூரியாசிட்டி



பிரபலமான இடுகைகள்