பிப்ரவரி மாத நூல்கள் அறிமுகம் 2019



புத்தகங்களை வாசிப்போம்





Twenty Yawns







Twenty Yawns By Jane Smiley and Lauren Castillo
லூசி இரவில் தூக்கம் கலைந்து எழுந்தாள். எப்படி அவள் தூங்கப்போகிறாள்? என்பதை புலிட்சர் பரிசு வாங்கிய ஜேன் ஸ்மைலி உங்களுக்கு சுவாரசியமாக எழுதிக்காட்ட, அதற்கு பக்கத்துணையாக படம் வரைவது ஓவியர் லாரன் காஸ்டில்லோ. 

Archer



Archer By Jacky Grayஇயற்கையான வீரம் நெஞ்சில் நிறைந்த ஆர்ச்சருக்கு சவால்கள் நிறைய காத்திருந்தன. உண்மையில் அவன் எதிர்கொள்ள வேண்டியது என்ன? உண்மையான போர் எது? எதிரி யார் என்பதை வேடிக்கையான கதையில் ட்விஸ்டுகளோடு சொல்லி உள்ளனர். 


The Power of People Skills


The Power of People Skills By Trevor Thronessகுழுவாக உழைப்பவர்களை எப்படி மேலாண்மை செய்வது, மன அழுத்தமின்றி நேர்மையாக பணியாற்றி வெல்வது எப்படி என வெற்றிக்கதைகளை எப்போதும் போல உதாரணம் காட்டி எழுதியுள்ள நூல் இது. 



A Grave Misunderstanding


A Grave Misunderstanding By Len Boswell
அவல நகைச்சுவைக் கதை. கொலை ஒன்று நடக்கிறது. அதைக் கண்டுபிடிக்க வருகிறார் சைமன். குற்றவாளி என சந்தேகப்படும் கூட்டத்திலிருந்து நிஜ குற்றவாளியை அடையாளம் கண்டாரா? கொலை நடந்தது எப்படி? ஏன் என்பதைச் சொல்லும் கதை இது. 

Last Hope Island



Last Hope Island By Lynne Olson
இரண்டாம் உலகப்போரில் உலகம் அறியாத வீரம் காட்டி உயிரிழந்த வீரர்களைப் பற்றி ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். 




நன்றி: புக்பப்