புஷ்அப் எடுத்தால் இதயம் வலுவாகுமா?



livescience




நாற்பது புஷ்அப் ஆரோக்கியம்


பிப்.15 இல் வெளியான ஆராய்ச்சி தகவல். நாற்பது புஷ் அப் எடுப்பது ஓகே. அதற்காக உடம்பில் ஓவர்டோஸ் எனர்ஜி வேணுமே என்பவர்கள் இந்த ஆராய்ச்சியை என்போலவே தாராளமாக புறக்கணித்துவிடலாம்.

முழு உடல் எடையையும் இருகைகளில் தாங்கி நெற்றி நிலம்பட வீழ்ந்து எழுவது அவ்வளவு எளிதா என்ன? புஷ்அப் எடுத்தால் இதயம் நெடுநாட்கள் வலுவாக இருக்குமாம்.

எதற்கு புஷ்அப், நல்லெண்ணெய்யை பத்து ரூபாய்க்கு வாங்கினால் போதுமே என லேட்டரலாக யோசிப்பவர்கள் தயவு செய்து இந்த கட்டுரையை வாசித்து என்னை நோகடிக்காதீர்கள்.

ஹார்வர்டு பொது உடல்நல பள்ளியைச்சேர்ந்த ஆய்வாளர் ஜஸ்டின் யாங் சொல்வதை மட்டுமே தமிழில் நான் கூறினேன். இதயத்தின் ரத்த ஓட்டம் தடைபடாமல் இயங்க என்ன செய்வீர்கள்? அல்லது டாக்டர்கள் என்ன காலம் காலமாக சொல்லி வந்தார்கள்? வாக்கிங் அல்லது ஜாக்கிங். தொட்டதற்கு எல்லாம் வண்டி சைக்கிள் தேடாமல் நடந்து செல்லுங்கள். லிப்ட் தேடாமல் படிக்கட்டில் மனம் வையுங்கள். அப்புறம் பாருங்கள். இதயம் ஜம்மென எப்படி இயங்குகிறது என.

நன்றி: லிவ் சயின்ஸ்

பிரபலமான இடுகைகள்