காதல், காமம் தெரிந்துகொள்ள வேண்டியவை
பெண்களின் உதடுகள் சிவப்பாக இருப்பது ஏன்?
1960 ஆம் ஆண்டு விலங்கியலாளர் டெஸ்மாண்டு மோரிஸ், பெண்களின் உதடுகள் பாலின ஈர்ப்புக்காக சிவப்பாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் இந்த தியரியை கென்ட் பல்கலைக்கழக ஆய்வு உடைத்தது. ஏனெனில் ஆண்களுக்கும் கூட சிலருக்கு உதடுகள் சிவப்பாக உள்ளதே என்று கூறினால் என்ன பேசுவது?
இணையத்தில் செக்ஸ் சாத்தியமா?
பலூன் போல பறந்துகொண்டிருக்கும் நிலையில் மேல், கீழ் பொசிஷனில் பாஸ், ரொம்ப கஷ்டம். இதெல்லாம் யோசிச்சு கேட்கிற புத்திசாலித்தனம் பிரமிக்க வைக்கிறது. ஆனால் அனைத்தும் கேமராக்களில் பதிவாகி பூமிக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் எப்படி செக்ஸ் சாத்தியம்? விதிகளை உடைப்பது மனிதர்களுக்கு பிடிக்கும் என்பதால் பின்னாளில் இதுவும் சாத்தியமாகலாம். ஆனால் இதுவரை விண்வெளியில் செக்ஸை யாரும் சோதித்துப் பார்க்கவில்லை.
ஆண்களுக்கு ஏன் ஆண்குறியில் எலும்பு இல்லை?
காரணம், நாம் ஒன்பது மடங்கு பரிணாம வளர்ச்சி பெற்று பல்வேறு விலங்குகளிலிருந்து மாறி வளர்ந்துவிட்டதுதான். பாகுலம் என்ற ஆண்குறி எலும்பு பாலூட்டி இன விலங்குகளுக்கு உண்டு. சிம்பன்சி மற்றும் கொரில்லாக்களுக்கு இந்த பாகுலம் எலும்பு சிறிய சைசில் உண்டு.
செக்சின்போது மூன்று நிமிடங்களுக்கு விந்தணுக்களை செலுத்த இந்த எலும்பு அனுமதிக்கிறது. அப்புறம்? அவ்வளவேதான். காரணம், பார்ன்ஹப்பில் வருவது போல எட்டு மணிநேரம் செக்ஸ் நீண்டால் பெண் விலங்குகள் கர்ப்பம் ஆகாமல் போகவும் வாய்ப்புள்ளதே. குறிப்பிட்ட பருவகாலம் என்ற நிபந்தனையும் மனிதர்களுக்கு கிடையாது.
பாலின ஈர்ப்புக்கு காரணம் என்ன?
ஆண்களைப் பொறுத்தவரை உறவு என்பது செக்ஸ் முடியும் வரை மட்டுமே. அதைத்தாண்டி அவர்களை பெண்கள் ஈர்க்க வேறு ஏதாவது புத்திசாலித்தனம், பணம் உள்ளிட்ட தேவைகள் வேண்டும். பெண்களும் ஆண்களைப் பார்த்து காதலில் விழுவது, தங்களின் தேவைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்தான். முக்கியமாக உணவு, பாதுகாப்பு, செக்ஸ் உள்ளிட்ட இதர விஷயங்கள்.
காதல் செக்ஸ் தாண்டி நட்புக்கும் ஹார்மோன் மாற்றங்கள், அறிவுத்தேடல்கள் காரணமாக உள்ளன. அதனால்தான் கூட்டத்தில் சிலரைப் பார்த்ததும் பேசத்தோன்றுகிறது. சிலரைப் பார்த்ததும் படாரென விலகத் தோன்றுகிறது.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்