தியானம் செய்யும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

What happens in my body when I meditate? © Getty
sf

ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி

தியானம் செய்யும்போது உடலுக்கு என்னாகிறது?

கண்களை மூடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும். அதனால், நான் தியானம் செய்வதில்லை. உண்மையிலேயே ஆழ்ந்து தியானம் செய்யும்போது மூளையில் பல்வேறு மாறுதல் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மூளையிலுள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான அமிக்டலா(amygdala), மெல்ல ஓய்வு பெறுவது தியானம் செய்யும்போதுதான். இதனால்தான் தியானம் செய்தபின் புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள். 


உடலில் காயம்பட்டிருந்தால் அல்லது திருப்பால் பூசியும் தீராத எரிச்சல்கள் மெல்ல ஓய்கின்றன. அதாவது, பாதிப்பு குறைவதோடு அவை குணமாகும் வாய்ப்பும் உருவாகிறது. 

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தால் கூட பச்சைப் பிள்ளையாய் சிரிக்கும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதும் தியானத்தில்தான். இதனால் இதயம் நல்லெண்ணெய் பயன்படுத்தாமலேயே இதயம் ரிலாக்ஸ் ஆகிறது. 

சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறையவும், முதுகுவலி தீரவும் வாய்ப்புள்ளது. அதற்காக தியானம் என்பதை சர்வரோக நிவாரணியாக நினைக்காதீர்கள். மனதிற்கு நிம்மதி தருவது. இதன் பின்னர் விஷயங்களை நிதானமாக யோசித்து பார்த்து தீர்வு காண முடியும். அதனால் தியானம் நல்லது. 

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்





பிரபலமான இடுகைகள்