பாலினப் பாகுபாடு நம் மனதில் உள்ளது



Image result for gender-neutral dress
Daily Star


பாலினப் பாகுபாடு என்பது மனநோய்!


பாலின பாகுபாடற்ற பள்ளிகள் என்ற கட்டுரையை அண்மையில் எழுதினேன். அதைப் பாராட்டிய நண்பர் எனக்கு அதிலுள்ள உடை கான்செஃப்ட் புரியவில்லை. என்ன சொல்லவருகிறாய்? ஆண் குழந்தைகளுக்கு கவுன் வாங்கித் தருவாயா? என்றார்.

உண்மைதான்.அதிலுள்ள உண்மை எனக்கு புரிந்தது. ஆனால் அவர் புரிந்துகொள்ளாத சமாச்சாரம், ஆண் பெண் என்ற உடைக்கான கோடுகள், எல்லைகள் மங்கி வருவது மட்டுமே நான் கூறவந்தது. இதுதொடர்பாக குங்குமத்திலும் நான் முன்னமே கட்டுரைகளை எழுதியுள்ளேன். ரன்வீர்சிங் பேஷன் ஷோவில் ஜென்டர் நியூட்ரல் உடைகளை அணிந்துவந்து அவரது காதலிக்கே ஷாக் கொடுத்தார். பாஜிராவ் மஸ்தானி விழாவில் அவர் அணிந்த பேன்ட் கூட அந்த ரகம்தான்.

எனது உறவினர் வீடுகளில் பெண்ணுக்கு டீ மட்டும், ஆணுக்கு ஹார்லிக்ஸ் தரப்படும் வித்தியாசத்தை கண்ணாரப் பார்த்துள்ளேன். பெண்கள் எங்களது ஊரில் பாரமாக பார்ப்பதும், அவர்களுக்கு செய்யும் சிறிய உடைகள் அல்லது கல்விச்செலவும் கூட அரசுக்கு வரி கட்டுவது போலவே நினைக்கிறார்கள். இவையும் பாலினப் பாகுபாடு குறித்த கவனத்தை ஏற்படுத்தும் கட்டுரை எழுதக்காரணம்.

குழந்தைகள் ஆணாக, பெண்ணாக பிறப்பது இங்கு குற்றமல்ல. அதனை மறைக்கவும் போவதில்லை. அது இயற்கையானது. ஆனால் அதில் வேறுபாடுகளைக் காண்பதை மட்டுமே நான் கூறுகிறேன். வெளிநாடுகளிலும் வேறுபாட்டைக் களைய, அவர்களை அழைக்கும் தெபீஸ், குழந்தைகள் என்ற சொல்லையும் நான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இறுதியாக டீ குடித்துவிட்டு பேசி முடிக்கும்போது இது சாத்தியமேயில்லை என்றார் நண்பர். இதை தற்போது விழிப்புணர்வாக பரப்பி வரும் நண்பர்களும் இதனை அறிந்திருக்கிறார்கள். ஆனால் இங்கு மாறவேண்டியது உடைகளல்ல. நம் மனம்தான். அதற்கான முயற்சிதான். உடைகள், பொம்மைகள் என்பது. இதன் அர்த்தம், வேறுபாடுகள் இருக்கக்கூடாது; குழந்தைகளின் மனதில் பிளவுகள் உருவாகக் கூடாது என்பதே.

ஃப்யூச்சர் குழும கடைகளில் பொம்மைகள், உடைகள் வாங்கி பீரோவை நிறைப்பதல்ல விஷயம். கேள்விகள், விவாதங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் தீர்ப்பு எழுதுவதில் எனக்கு ஆர்வமில்லை. அதனை இன்று மட்டுமல்ல நான் நாளையும் செய்யக்கூடாது என்றே எனக்கு கூறிக்கொள்கிறேன்.

ச.அன்பரசு


பிரபலமான இடுகைகள்