காதல் காரணங்கள் என்ன?







Man Holding Flowers Standing Beside Woman on Railroad
pexels.com









காதல் என்பது என தத்துவம் என சொல்லி கடிக்கப்போவதில்லை.  அறிவியல் ரீதியில் அதனை பார்ப்போம்.

பொதுவாக ஒருவருக்கு காதல் வர தலைமீது லைட் எரியவோ, மணி அடிக்கவோ தேவையில்லை. நம்மிடம் இல்லாத விஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவர் மீது ஈர்க்கப்படுவோம். அவர் நண்பராகலாம், பின்னாளில் உறவின் தன்மையைப் பொறுத்து வீட்டில் நுழையுமளவு ரைட்ஸ்களை அவர்களுக்கு நீங்களும் நானும் வழங்கலாம்.

அண்மையில் செய்த ஆய்வுப்படி காதலுக்கு தூண்டுகோலாக அமையும் சூழல்கள் என்ன என்று ஆராய்ந்திருக்கிறார்கள். 500 பேர்களிடம் அறுபது விஷயங்களை கேள்வி கேட்டு ஆராய்ந்திருக்கிறார்கள்.

இயற்கைக்கு நெருக்கமாக இருப்பது

யாராவது 143 சொன்னால்,

நாய்கள், பூனைகள் மகிழ்ச்சியாக பார்க்கும்போது

குழந்தை சிரிக்கும்போது(யாருடைய குழந்தை?)

சிரமத்தில் இருக்கும் போது உதவுவது

காதல் கிடைக்காதபோது சரி. கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும்.

இப்படி செய் அப்படி செய் என காந்தி சொன்ன செய் அல்லது செத்துமடி கான்செப்டை காதலி அப்ளை செய்வார். ஏன்? நம் டிசைன் அப்படித்தான்.

பொறாமை பொங்கும். ஈஏ போகிறீர்கள். பெண்கள் செக்சனில் சூப்பர் அனாட்டமியுடன் லேடி போகிறார் என்றால் காதலியிடம் பர்மிஷனா கேட்க முடியும். ஹவ் நைஸ் பூட்டி என மனதில் சிலாகித்து அதை கிரிப்டோகிராபி செய்துகொண்டு முகத்திற்கு அனுப்ப வேண்டியதுதான். சிரிச்சா போச்சு, பொறாமை கலிஃபோர்னியா காட்டுத்தீயாக எரியும். பகலில் முடியாது. ஆனால் இரவில் சமாளிச்சுக்கலாம்.

எது பெஸ்ட்னு ஆலோசனைகள் குவியும். பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள். ஆனால் முடிவெடுக்கும் பொறுப்பை விடாதீர்கள் என்பார்கள். விட்டால், சோலி முடிந்தது.

மாமா நீங்க எங்கிருக்கீங்க? என பாச அழைப்புகள் பாத்ரூமில் இருந்தாலும் வரும். ஏன்டா இப்படி? இனிமேல் அப்படித்தான் என ஜனகராஜ் வாய்ஸ் மூளையில் கேட்கும். யெஸ் நீங்க  என்கேஜ் ஆகிட்டீங்கள்.

இப்படியெல்லாம்  நாங்கள் சொன்னாலும் காதல் வரும் வழியை யாரும் தீர்மானிக்க முடியாது. பாடிபில்டர் அண்ணன், ஆர்மி அப்பா இல்லாத பெண்ணை தேடி காதலைக் கண்டுபிடிப்பது உங்கள் திறமை.

பிரபலமான இடுகைகள்