லவ் இன்ஃபினிட்டி: காதல் இருக்கா? இல்லையா?
freepik |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், பாக்ஸ்டர்
எனக்கு ரூபா, மகாதேவி இவங்க மேல் கூட பெரிய கிரேஸ் கிடையாது. ஆனால் மைதிலி வேற லெவல். அவ அதிகம் பேசவில்லை என்றால் கூட ஏதோ ஒன்று அவளை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறது. பெண்கள்கிட்ட நட்பாகறதுக்கு பெரிய விஷயம் ஒண்ணும் வேணாம். அவங்க சேஃபா இருக்கிறாங்க என்பதை நீங்க உறுதிபண்ணனும். அப்புறம் அவங்க பேசற முட்டாள்தனமான பேச்சை புன்னகை முகத்தோடு கேட்கணும். நிச்சயம் தீர்வு சொல்லவே கூடாது. ஏன்னா கௌன்சிலிங் நம்மோட தொழில் கிடையாது. So Letss Enjoy.
நீ இப்போ Kangayam பஸ் ஸ்டாண்ட் போறதில்லையா?
அரச்சலூர் போனயாம். பசங்க தகவல் சொன்னாங்க. உன்கூட கண்டிப்பாக பேசியாகணும். இன்னும் எத்தனை நாளைக்கு Lr எழுதறது. பயங்கர கடுப்பா போச்சு எனக்கு. இனிமேல் Lr எழுதறதில்லைன்னு நினைச்சேன். ஆனா, முடியலை. எப்படி மாற்றிவிட்டாய் என்னை. வசியம் செய்த வசிய்க்காரி, வசீகரி(வசீகராவின் பெண்பால்) நீ. ஆனந்த விகடன் கிடைக்கல. இந்த வருஷம் எப்படியும் பத்திரிகையாளன் ஆயிடுவேன்.
மோகனா, மகாதேவி கிட்ட மட்டும் பேசறேன்னு சொல்ற. உன் Friends எல்லாம் பேசினா உன்னை கிண்டல் செய்வாங்கன்னுதான் உன்கிட்ட பேசுவதில்லை.
உன்னைப் பார்த்தால் hai சொல்ல நினைப்பேன். ஆனா வார்த்தை வராது. காலேஜ் முடிஞ்சு போறப்ப Bye சொல்ல நினைப்பேன். ஆனா நீ வேற பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு இருப்பாய். இல்லைனா கிளாஸில் சார் அல்லது மேம் இருப்பாங்க. ஆனால் தினமும் இப்படியே போயிருமே என்பதை நினைச்சு எனக்கு அழுகையே வந்திருச்சு தெரியுமா?
நேர்ல Phone ல உன்கிட்ட பேசறபொழுது எனக்கே ரொம்ப சங்கடமாயிருக்கிறது. நீ எவ்வளவு ஜாலியா பேசற. என்னால அப்படி பேச முடியலை. எனக்கு மத்தவங்க மாதிரி ஜோவியலா ஜோக் சொல்லிப் பேசத் தெரியாது. எல்லாருக்குமே நல்லா காமெடியா பேசறவங்களத்தானே பிடிக்கும். Yes or No. கவிதா அக்காவுக்கு Marriage. அடுத்த மாசம். மாப்பிள்ளை முத்தூர் குழலி பாளையம்.
(காதல் வரும்)