இடுகைகள்

வேளாண்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் சட்டங்களுக்கு எதிராக ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்!

படம்
  ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்! விவசாயிகள் மேற்குலக நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு விதிமுறைகளை மாற்றக்கோரி பெரும் திரளாக போராடி வருகிறார்கள். போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உக்கிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம், ஐரோப்பிய யூனியனின் சூழல் பாதுகாப்பு விதிமுறைகள், இறைச்சி, தானியங்களை மலிவான விலைக்கு அரசுகள் இறக்குமதி செய்வது, உரவிலை ஏற்றம் ஆகியவை முக்கியமான காரணங்கள். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரும் இன்னொரு மறைமுக காரணி.  உலக நாடுகளில் வேறுபாடுகள் இன்றி வெப்ப அலை, வெள்ளம், பஞ்சம், காட்டுத்தீ பாதிப்புகள் ஏறபட்டு வருகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படும் கால அளவு நீண்டுகொண்டே வருகிறது. வெப்பம் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் உற்பத்தி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. ஸ்பெயின் நாட்டில் கோதுமை, அரிசி, பார்லி ஆகிய தானியங்கள் உற்பத்தி பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.  ஜெர்மனி, போலந்து நாடுகளில் அதிக மழைபொழிவு காரணமாக கோதுமை பயிர் சேதமாகி அறுவடை செய்யும் காலம் தவறிப்போயுள்ளது. இத்தாலியில், காற்ற

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் அணிவரிசை

படம்
  டைம் 100 கண்டுபிடிப்பாளர்கள் வரிசை காட்டுதீயைக் கட்டுப்படுத்துவோம் கிறிஸ்டினா தாஹ்ல் 45 அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதை விட்டுவிடுகின்றனர். தீயை அணைக்கவேண்டும். தீ பற்றாமலிருக்க முயலவேண்டும் என ஊடகங்கள் நாசூக்காக கூறி, தம் விளம்பர வருமானத்தை காப்பாற்றிக்கொள்கின்றன. அரசியல்வாதிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு பெருநிறுவனங்களை நம்பியுள்ளதால் அவர்களின் செயல்பாட்டை குறைகூறுவதில்லை. ஆனால் முப்பத்தேழு சதவீத காட்டுத்தீ சம்பவங்களுக்கு கரிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் பெரு நிறுவனங்களும், சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களும்தான் காரணம் என கிறிஸ்டினா தைரியமாக கூறுகிறார். தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, காலநிலை மாற்றத்தின் இயல்புகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதன்மூலம் நமது நடவடிக்கைகளை சற்று முன்னதாக திட்டமிட்டுக்கொள்ளலாம். மாசுபாட்டிற்கு கட்டுப்பாடு அனஸ்டாசியா வால்கோவா 32 காலநிலை மாற்றத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, உணவு உற்பத்தி தடுமாறுகிறது. ரீகுரோ ஏஜி என்ற நிறுவனம், வேளாண்மைத்துறையில் உள்ள பெருநிறுவனங

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் வேளாண்மை!

படம்
  வெப்ப அலை தாக்குல்களால் பற்றாக்குறையாகும் உணவு தக்காளி விலை உயர்ந்தது பற்றி பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவசியமான கவலைதான். உலகம் முழுக்க வெப்ப அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்கறி, பழங்கள், உணவுப்பயிர்கள் என அனைத்துமே மெல்ல அழிந்து வருகின்றன. சூரியனின் வெப்பம் காரணமாக, ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமான கடலும் வளம் குன்றி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் வெப்பஅலை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம், எதிர்கொண்டதிலேயே அதிக வெப்பநிலை கொண்டதாக மாறி   மக்களை வதைத்தது. இன்று சந்தை முழுக்க உலகமயம் ஆகிவிட்டது. ஒரு நாட்டில் காய்கறி விளையாதபோது இன்னொரு நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கலாம். இந்த கோணம் தவறு என்று கூறமுடியாது. ஆனால் இதன் இன்னொருபக்கம் இருக்கிறது. இதன்படி, காய்கறிகள் பழங்கள் சந்தையில் கிடைக்கும். ஆனால் அதிக விலை வைத்து விற்கப்படும். எனவே, அனைவராலும் வாங்க முடியாது.   இப்படியான சூழல் ஏற்கெனவே உருவாகிவிட்டது. 2018ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் வெப்ப அலை தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு விளைவித்த உணவு

சூழல் பற்றிய விழிப்புணர்வால் மக்கள் பயன் பெறுவார்கள்! பிரபு பிங்காலி, பொருளாதார பேராசிரியர்

படம்
  சூழலில் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை! பிரபு பிங்காலி, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை மற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். புது டில்லியில் இயங்கும் டாடா கார்னெல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார்.  உணவு அமைப்பு முறைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்தியது எது? வேளாண்மையில்  உணவு உற்பத்தி, விளைபொருளை விவசாயிகளிடமிருந்து பெறுவது, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். இதில், நாம்  போதிய கவனம் செலுத்துவதில்லை. விவசாயி, விளைபொருள், விற்கும் சந்தை, உணவுப்பொருட்களுக்கான தேவை, நகரங்களின் உணவு நுகர்வு, உணவின் தரம், ஊட்டச்சத்துகள் என உணவு அமைப்பு முறை, ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது.  காலநிலை மாற்றங்களால் இந்தியா எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கிறது? வங்கம் - பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தான் நெல், கோதுமை ஆகிய பயிர்கள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசம், பீகார் என சென்றால், அங்குள்ள கிராமங்களின் வறுமையையும் அறியலாம். வெப்பமயமாதல்

வளர்ந்த நாடுகள் தான் மாசுபடுதலுக்கு முழுப்பொறுப்பு - மாதவன் ராஜீவன், முன்னாள் செயலர், புவி அறிவியல் துறை

படம்
  மாதவன் ராஜீவன் முன்னாள் செயலர், புவி அறிவியல்  உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணம் என்ன? காலநிலை மாற்றம்தான் உலக நாடுகள் முழுவதும் வெப்பம் அதிகரிக்க முக்கியமான காரணம். இதன் விளைவாக வெப்ப அலைகள் உருவாகின்றன. மழைப்பொழிவு அதிகரிக்கிறது. வெள்ளப்பெருக்கு சொத்துகளை நாசமாக்குகிறது. மனிதர்களின் தலையீடு காலநிலை மாற்ற விளைவுகளை மேலும் தீவிரமாக்குகிறது.  வெப்பமண்டல நாடுகளில் கூட காலநிலை மாற்ற விளைவுகள் குறையவில்லை. நாம் எப்படி இதற்கான தீர்வைக் கண்டறிவது? தீவிரமான காலநிலை வேறுபாடுகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியசிற்குள் இருக்க வேண்டுமென்பதுதான் காலநிலை மாநாட்டு ஒப்பந்தம் கூறுவது. அதற்கு நாம் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டியிருக்கிறது.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா ஆகியவையே உலகளவில் அதிக மாசுபாடுகளை உருவாக்குகின்றன.  வளரும் நாடுகள் இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா? வளர்ந்த பணக்கார நாடுகள் மாசுபாடு பற்றிய பிரச்னையில் முக்கியமான முடிவை எடுக்கவேண்டும். உலகளவில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸி