டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் அணிவரிசை

 







டைம் 100

கண்டுபிடிப்பாளர்கள் வரிசை

காட்டுதீயைக் கட்டுப்படுத்துவோம்

கிறிஸ்டினா தாஹ்ல் 45

அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதை விட்டுவிடுகின்றனர். தீயை அணைக்கவேண்டும். தீ பற்றாமலிருக்க முயலவேண்டும் என ஊடகங்கள் நாசூக்காக கூறி, தம் விளம்பர வருமானத்தை காப்பாற்றிக்கொள்கின்றன. அரசியல்வாதிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு பெருநிறுவனங்களை நம்பியுள்ளதால் அவர்களின் செயல்பாட்டை குறைகூறுவதில்லை. ஆனால் முப்பத்தேழு சதவீத காட்டுத்தீ சம்பவங்களுக்கு கரிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் பெரு நிறுவனங்களும், சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களும்தான் காரணம் என கிறிஸ்டினா தைரியமாக கூறுகிறார்.

தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, காலநிலை மாற்றத்தின் இயல்புகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதன்மூலம் நமது நடவடிக்கைகளை சற்று முன்னதாக திட்டமிட்டுக்கொள்ளலாம்.

மாசுபாட்டிற்கு கட்டுப்பாடு

அனஸ்டாசியா வால்கோவா 32

காலநிலை மாற்றத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, உணவு உற்பத்தி தடுமாறுகிறது. ரீகுரோ ஏஜி என்ற நிறுவனம், வேளாண்மைத்துறையில் உள்ள பெருநிறுவனங்களின் மாசு கட்டுப்பாட்டிற்குரிய வழகாட்டுதல்களை வழங்குகிறது. விவசாயின் மகளாக பிறந்த அனஸ்டாசியா, பேரளவில் செய்யப்படும் வேளாண்மையில் உள்ள சிக்கல்களை முதலிலேயே பார்த்து வந்தார்.

ரீ குரோ ஏஜி நிறுவனம், தற்போது 1.2 பில்லியன் ஏக்கர் நிலங்களைக் கண்காணித்து வருகிறது. இதன்மூலம் உணவு உற்பத்தி நவீனமாவதோடு, சூழலுக்கு உகந்த வகையில் வேளாண்மையை மாற்றிக்கொள்ளவும் முடிகிறது.

தலைவர்கள்

யூலியா ஸ்வைரைடென்கோ

துணை பிரதமர், நிதியமைச்சர் என இரண்டு பொறுப்புகளையும் சுமக்கும் உக்ரைன் நாட்டு பெண்மணி. உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு போரை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையிலும் கூட அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்க தொழிலதிபர்களோடு இணையம் வழியாக சந்திப்புகளை நடத்தி வருகிறார் யூலியா. வலிமை, திறன், புத்திசாலித்தனம், தைரியம் என அனைத்திலும் சாதிக்கும் திறன் கொண்டவராக உள்ளார். போர் நடந்து வருகிற நெருக்கடியிலும் கூட தனது நாட்டு தொழில் நிறுவனங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை ஒரு ட்ரில்லியன் டாலர்களாக பெருக்க முயன்று வுருகிறார்.

நெருக்கடியான சமயத்தில் நாட்டை வலுப்படுத்த போராடும் யூலியா, உக்ரைன் மக்களின் தன்னம்பிக்கைக்குச் சான்று.

 ஜினா ரைமாண்டோ

திறமையான நிர்வாகி

ஷாலண்டா யங் 46

அரசின் நடவடிக்கைகளை பொதுமக்களிடம் விளக்கி சொல்லி புரிய வைப்பது முக்கியம். அப்போதுதான் அரசின் தொலைநோக்கு பார்வையை மக்கள் புரிந்துகொள்ள முடியும். மேலும், மசோதாக்களை மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்தி அதை ஏற்றுக்கொள்ள வைத்தால்தான் மசோதா சட்டமாக மாறும். மக்களுக்கு பயன்கள் சென்று சேரும். அந்த பணியை ஷாலண்டா செய்துவருகிறார். பெருந்தொற்று காலத்தில் இவரின் நிர்வாக திறமையை அமெரிக்கா வெளிப்படையாக அடையாளம் கண்டது.

காங்கிரஸ் சபையின் நம்பிக்கையைப் பெற்றவரான ஷாலண்டா, சட்டங்கள், அதன் நடைமுறை பற்றிய பேரளவிலான அறிவைப் பெற்றுள்ளார். அமெரிக்க அரசின் பட்ஜெட், அதில் காப்பாற்ற வேண்டிய மதிப்புகள் ஆகியவற்றுக்காக போராடி வருகிறார்.  அரசு நிர்வாக அலுவலக தலைவராக பணியாற்றி வருபவர், தனது சிறந்த தலைமைத்துவத்தால் பெரும் நம்பிக்கையைத் தருகிறார்.

நான்சி பெலோசி

அச்சுறுத்தல்களுக்கு இடையில் நம்பிக்கை

எரிகா ஹில்டன், துடா சாலாபெர்ட் 30,42

பால்புதுமையினர் அரசியலில் சிறுபான்மையினர்தான். எனவே, அவர்களை வலதுசாரிகள், சமூகவிரோ சக்திகள் எளிதாக கொலை மிரட்டல் வரை அச்சுறுத்த முடிகிறது. இதற்கெல்லாம் அஞ்சாமல்தான் எரிகா, துடா ஆகியோர் மக்களுக்காக செயல்பட்டு வருகிறார்கள். எரிகா, வீடற்ற மக்களுக்கான நலன்களுக்கு உழைத்து வருகிறார். துடா, பாலியல் தொழிலாளியாக இருந்தவர். பால்புதுமையினர் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு இடங்களை ஒதுக்கும்படியான கொள்கையை உருவாக்கி அதை சட்டமாக்க முயல்கிறார். இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் பால்புதுமையினர் பாலியல் தொழிலில் இறங்க மாட்டார்கள். ‘உயர்கல்வி பட்டப்படிப்பு நிறைய மக்களை வீதியில் இருந்து அகற்றும். இது பால்புதுமையினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் பயன் அளிக்கும் ’’ என்றார் துடா.

சால்கைர் புர்கா

டைம் 100 செப்.2023 இதழ் கட்டுரைகளை தழுவியது.

கருத்துகள்