இடுகைகள்

சுபாஷ் பாலேகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
நேர்காணல் சுபாஷ் பாலேகர் ஷிஸ்கர் ஆர்யா 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சுபாஷ் பாலேகரின் ஜீரோ பட்ஜெட்டை கையில் எடுத்துள்ளது. இதுபற்றி சுபாஷ் பாலேகர் என்ன சொல்லுகிறார்? உங்கள் விவசாய முறையை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்துழ 2014 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலின்போது  மோடி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதாக கூறினார். அவர் இந்திய விவசாய கௌன்சில் சில ஐடியாக்களை இதற்காக தனக்கு கூறும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அம்முறையில் விஷயங்கள் நடைபெறவில்லை. நிதி ஆயோக் இதுகுறித்து சர்வே ஒன்றை செய்தது. வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய இரண்டும் எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை என்று இதன் மூலம் தெரிய வந்தது. அதன்பின்னர்தான் என்னுடைய டெக்னிக் மீது நம்பிக்கை வந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்? இந்த ஆண்டு டில்லியில் இதுபற்றி சந்திப்பு நடைபெற்றது.  நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார், இந்திய விவசாய கௌன்சில் தலைவர்  திரிலோச்சன் மொகபத்ரா, விவசா