இடுகைகள்

குழந்தை வளர்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர்கள் இல்லாமல் தனியாக கம்யூனிட்டியாக குழந்தைகள் வளர்ந்தால்....

படம்
  ரஷ்ய உளவியலாளர் லெவ் வைகோட்ஸ்கி, குழந்தைகள் பெற்றோருடன் இருக்கும்போது அனுபவித்த சம்பவங்களை, நிகழ்ச்சிகளை அறிய புரிந்துகொள்ள நினைத்தார். கலாசாரம், அந்தரங்க ரீதியாக, தனிநபர் ரீதியாக மனிதர்கள் உள்ளனர். நாம் நாமாக இருப்பது பிறரின் வழியாகத்தான் நடைபெறுகிறது என்று லெவ் கருதினார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்பவர்கள், குழந்தைகளின் மூதாதையர் ஆகியோரின் வழியாகவே குழந்தைகளின் அறிவு, மதிப்பீடு, தொழில்நுட்ப அறிவு வளருகிறது. ஒருவர் தன்னுடைய சிந்தனையை, கருத்தை சமூகத்தின் பல்வேறு சூழ்நிலைகளை சந்திப்பதன் வழியாக புரிந்துகொள்கிறார். தன்னை திருத்தி, மேம்படுத்திக்கொள்கிறார். லெவ், ஒருவரின் மனதில் ஒரே நேரத்தில் கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகிறது என்று கருதுகிறார். ஆசிரியர், மாணவர்களை வழிநடத்தி அவர்கள் புதிய திறன்களைக் கற்க உதவி அவர்களை சிறந்த திறமை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். லெவின் கருத்துகள் காரணமாக மாணவர்களை மையப்பொருளாக கொண்ட கல்விமுறை, பாடமுறை சார்ந்ததாக மாறியது. ஆசிரியர், மாணவர் என இருவரும் சேரந்து உழைத்து கற்பதாக கல்விமுறையில் இயல்புகள் மாறின.  lev vygotsky 2 bruno bettelhem 1964ஆம் ஆண்டு, பெட்டில்க

உளவியலாளர் வாட்சன் செய்த கொடூரமான ஆல்பெர்ட் பி சோதனை!

படம்
  இருபதாம் நூற்றாண்டின்போது, பல்வேறு உளவியலாளர்கள். மனத்தை புரிந்துகொள்ள முயன்றனர். அதன்படி ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை வழியாக பல்வேறு சோதனைகளை செய்து வந்தனர்.  குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட சூழ்நிலை வழியாக மனத்தை அறிய முயற்சி செய்தனர். இதன் மறைமுகமான அர்த்தம், அவர்கள் செய்த பல்வேறு சோதனைகள் வேலைக்கு ஆகவில்லை என்பதேயாகும்.  ஜான் வாட்சன், தோர்ன்டைக் என்ற ஆய்வாளரைப் போலவே குண இயல்புகளை தீவிரமாக ஆராய்ந்தார். கூறிய கருத்துகளும் சர்ச்சைக்குரியவைதான் இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு கொண்ட உளவியலாளராக செயல்பட்டார். இதன் காரணமாக இவரை குண இயல்புகள் சார்ந்த ஆராய்ச்சிகளின் தந்தை என பிறர் புகழ்ந்தனர். அழைத்தனர். 1913ஆம் ஆண்ட சைக்காலஜி ஏஸ் தி பிஹேவியரிஸ்ட் வியூஸ் இட் என்ற தலைப்பில் வாட்சன் உரையாற்றினார். இந்த உரைதான் குண இயல்பு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியமான செயல் அறிக்கை என்று கருதப்பட்டது. இதில், அறிவியல் முறையிலான உளவியல் என்பது மனநிலைகளுக்கான ஆராய்ச்சியை விட முன்முடிவுகள், குணத்தை கட்டுப்படுத்தும் இயல்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.  பால்டிமோரிலுள்ள ஹாப்க

டைம் 100 - எய்லீன் கு, வாலெரி மாசன், டெல்மோடே அண்ட் பான்மாவோ ஜாய், எமிலி ஆஸ்டர், துலியோ டி ஆலிவெய்ரா, சிக்குலில்லே மோயோ

படம்
  Eileen gu டைம் 100 வளர்ந்து வரும் ரோல்மாடல்  எய்லீன் கு ஒலிம்பிக்கில் எய்லின் கு மூன்று மெடல்களை வென்றுள்ளார். இன்று விளையாடும் விளையாட்டு வீரர்களில் அவரைப் போல ஒழுங்கு கொண்ட விளையாட்டு வீரரைப் பார்ப்பது மிகவும் கடினம். அந்தளவு தனது விளையாட்டு மீது ஆர்வமாக இருக்கிறார். ஒருமித்த கவனம், கடின உழைப்பு, அதற்கான அர்ப்பணி என அத்தனை திறமையான அம்சங்களையும் அவர் கொண்டிருக்கிறார்.  பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக அவர் என்னிடம் விளையாட்டு தொடர்பாக ஆலோசனை கேட்டு வந்தார். அவர் அப்போது தனது விளையாட்டில் புகழ்பெற்று வந்தார். அதுவே விளையாட்டில் அவருக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது.அவர் தான் பிறந்து வளர்ந்தபோது இருந்த பெண்களோடு தான் நட்புணர்வு கொண்டிருந்தார். பிறகு தான் அவர் புகழ்பெற்று ஏராளமான மாத, வார இதழ்களின் அட்டைப்படங்களில் இடம்பிடித்தார். பிறகு ஃபெண்டி, குசி ஆகிய நிறுவனங்களில் சில உலகளாவிய பிரசார திட்டங்களில் இடம்பெற்றார். அவர் தனக்குப் பிடித்த விளையாட்டில் சாதிக்க ஆசைப்பட்டார். அதேசமயம், தனது கல்லூரியையும், அதிலுள்ள நண்பர்களையும் விரும்பினார்.  நான் அவரிடம் பேசிய சில மாதங்களுக்குப் பிறகு